Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வீட்டை விட்டு வெளியேறிய 16 வயது சிறுவன்… கூகுள் பே மூலம் டிராக் செய்த போலீஸ்… சிறுவன் தெரிவித்த பகீர் காரணம்…!

Gowthami Subramani October 08, 2022 & 19:00 [IST]
வீட்டை விட்டு வெளியேறிய 16 வயது சிறுவன்… கூகுள் பே மூலம் டிராக் செய்த போலீஸ்… சிறுவன் தெரிவித்த பகீர் காரணம்…!Representative Image.

யூ டியூபில் சொந்தக் காலில் நிற்பது எப்படி என வீடியோ பார்த்த பின், 10 ஆம் வகுப்பு மாணவன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளான். பிறகு, போலீசார் மாணவனை கூகுள் பே மூலம் சிறுவனின் இருப்பிடத்தை அறிந்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

சென்னையில் முகப்பேர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், அந்த பகுதியிலேயே உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். பள்ளிக்குச் சென்ற இந்த சிறுவன், நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். இதனால், வெகு நேரம் காத்திருந்து, அந்த மாணவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் தனிப்படை அமைத்து மிகத் தீவிரமாக தேடி வந்தனர்.

விசாரணையில் வெளிவந்த தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது. விசாரணையில் தெரிவித்ததாவது சிறுவன், தனது தொலைபேசியைப் பயன்படுத்தாமல், அவனது தந்தையின் சிம் கார்டை வைத்து கூகுள் பே மூலம் மூன்று முறை பணப் பரிமாற்றம் செய்திருந்தது தெரிய வந்தது. இதனடிப்படையில், சிறுவனைப் போலீசார் கண்டறிந்து விசாரித்துள்ளனர்.

இதில், அந்த சிறுவன் கூறியதாவது, செல்போன் பயன்படுத்தும் போது, பெற்றோர் கடன் வாங்கி படிக்க வைப்பதாக சொல்லிக் காட்டியதாகவும், தான் யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என நினைத்து, யூடியூபில் எப்படி சொந்தக் காலில் நிற்பது என வீடியோ பார்த்திருப்பதாகக் கூறினான். மேலும், இந்த வீடியோவைப் பார்த்து எதாவதொரு வேலையைத் தேடி கொள்ளலாம் என நினைத்து அப்பாவின் சிம் கார்டை எடுத்துக் கொண்டு வந்ததாகவும், வெளி மாநிலத்திற்கு செல்ல நினைக்கும் போது போலீசார் பிடித்து விட்டனர் எனவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினர், மாணவருக்கு அறிவுரை வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். சமூக வலைதளங்களில் பதிவிடும் இது போல வீடியோக்களை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்துமாறும், பள்ளி மாணவர்கள் பெற்றோர்களின் அறிவுரையில்லாமல் எதையும் செய்ய வேண்டாம் எனவும் கூறப்பட்டு வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்