Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஹெல்மெட் போடச்சொன்ன இளைஞருக்கு மிரட்டல்.. காவலருக்கு ரூ.100 அபராதம்!!

Sekar October 08, 2022 & 18:33 [IST]
ஹெல்மெட் போடச்சொன்ன இளைஞருக்கு மிரட்டல்.. காவலருக்கு ரூ.100 அபராதம்!!Representative Image.

சென்னை அருகே ஹெல்மெட் அணியாமல் டுவீலர் ஓட்டிச் சென்ற காவலர் ஒருவரை ஹெல்மெட் அணியுமாறு கூறிய இளைஞரை, காவலர் தரக்குறைவாக பேசிய வீடியோ வைரலான நிலையில், காவலருக்கு ரூ.100 அபராதம் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

டுவீலரில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனும் நிலையில், இதை உறுதி செய்ய காவல்துறையினர் ஆங்காங்கு சாலைகளில் நின்று சோதனைகளில் ஈடுபட்டு வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். 

இந்நிலையில் சென்னை நியு ஆவடி சாலையில் பயணம் செய்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர், சக வாகன ஓட்டியான காவலரிடம் ஹெல்மட் அணிந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் கடுப்பான காவலர், ஹெல்மெட் அணியுமாறு கூறிய இளைஞரை நிறுத்தி, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

இதை வீடியோவாக பதிவு செய்த அந்த இளைஞர், உங்கள் நல்லதுக்கு தானே சொன்னேன் எனக் கூற, பதிலுக்கு காவலர், “நான் தான் பாத்துக்குறேன்னு சொல்றேன்ல உனக்கு எதும் பிரச்சனையா. நான் ஹெல்மட் போடுவேன் போட மாட்டேன் உனக்கு என்ன பிரச்சனை? நீ ஹெல்மட் போட சொன்னது தப்பு தாண்டா போ”என ஒருமையில் தரக்குறைவாக இளைஞரை மிரட்டும் தொனியில் ஒருமையில் பேசியுள்ளார். 

இந்த வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட, இது உடனடியாக வைரல் ஆனது. இந்நிலையில் சம்பவம் குறித்து விசாரித்த அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார், மிரட்டிய காவலர் மதுரவாயல் காவல் நிலையத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பதை தெரிந்துகொண்டனர். 

இதையடுத்து காவலர் மீது தலைக்கவசம் போடாமல் வாகனம் ஓட்டியதற்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் இதில் தொடர்புடைய இளைஞர், ஹெல்மெட் அணியாமல் சென்றதற்கு மட்டுமே காவலர் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னை அவதூறாக பேசியது குறித்து எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்