Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

அழகான பெண் என்று ஏமாந்த 8 இளைஞர்கள்...அதுல இன்னும் 2 வெய்டிங் லிஸ்ட்...அலேக்காக மாட்டிய கல்யாண ராணி!

Priyanka Hochumin September 16, 2022 & 10:10 [IST]
அழகான பெண் என்று ஏமாந்த 8 இளைஞர்கள்...அதுல இன்னும் 2 வெய்டிங் லிஸ்ட்...அலேக்காக மாட்டிய கல்யாண ராணி!Representative Image.

கரூரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி இதுவரை 8 பேரை திருமணம் செய்து பணத்தை ஏமாற்றிய பெண், அடுத்து திருமணம் செய்ய போகும் மாப்பிளையால் கையும் களவுமாக மாட்டிக்கொண்டார். விரிவான தகவலை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கரூர் மாநகராட்சியில் ஆதி விநாயகரே வீதியில் வடித்து வருகிறார் சௌமிய என்னும் சபரி. இவர் காந்திகிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வரும் தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்வருகிறார். இந்நிலையில் தான் மறுமணம் செய்ய உள்ளதாகவும், பையன் யாராவது இருந்தால் கூறுங்கள் என்று அக்கம் பக்கத்துக்கு வீட்டில் வசிப்பவர்களிடம் கூறியுள்ளார். சரி பக்கத்து வீடு தானே என்று நம்பி தன்னுடைய சொந்தக்காரரான ஆட்டோ ஓட்டுனர் சிவகுமாரிடம் இப்படி ஒரு பொண்ணு இருப்பதாக கூறியுள்ளார்.

அவர்களும் வந்து பொண்ணை பார்த்து விட்டு திருமண ஏற்பாடுகளை நடத்த ஆரம்பித்துள்ளனர். இதற்கு அப்புறம் தான் சௌமியாவின் ஆட்டம் ஆரம்பித்தது. தான் வங்கியில் மேலாளராக பணியாற்றுவதாகவும், எனக்கு அமைச்சர்களை நன்கு தெரியும் என்று கூறிய சௌமியா, சிவகுமாருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி முன்பணமாக 10 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். இதனை நம்பி தன்னுடைய வீட்டில் பணத்தை புரட்டி சௌமியாவிடம் கொடுத்துள்ளார் சிவகுமார். இது மட்டும் இல்லாது தங்களுடைய உறவினர்கள் 20 பேத்துக்கும் அரசு வேலை வாங்கி தர மொத்தம் 10 லட்சம் ரூபாயை சௌமியாவிடம் கொடுத்துள்ளனர். சிவகுமாரிடம் தான் பெரிய இடத்து பொண்ணு என்பதை நிரூபிக்க கரூரில் இருக்கும் பெரிய பங்களா ஒன்றை காட்டி இது தான் என்னுடைய வீடு, நான் காதல் திருமணம் செய்து கொண்டதால் நான் வீட்டை விட்டு வெளியே வந்ததாகவும் சிவகுமாரிடம் கூறியுள்ளார் சௌமியா.

இருந்தாலும் நம்ப ஊரு வழக்கப்படி பெண்ணின் போட்டோவை கொடுத்து அவரை பற்றி விசாரிக்க கேட்டுள்ளார் சிவகுமார். இதில் தான் அவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. விசாரிக்கையில் அவர் கூறியது அனைத்துமே பொய் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. சௌமியாவின் போட்டோவை அவரின் பெற்றோரிடம் காட்டிய போது தங்களுக்கும் அவளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பர் தெரிவித்துள்ளனர். மேலும் தன்னுடைய வீடு என்று காட்டியது சௌமியாவின் வீடு இல்லை என்றும் தெரியவந்துள்ளது. இதனை தெரிந்து கொண்ட உறவினர்கள் சிவகுமாருக்கு போன் செய்து எச்சரித்துள்ளனர்.

மேலும் வீட்டின் உரிமையாளரிடம் விசாரித்த போது அவரும் 15 லட்சம் கொடுத்து  ஏமாந்தது தெரியவந்துள்ளது. எனவே, சிவகுமார் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றாக சௌமியாவின் வீட்டிற்குள் புகுந்து அவரை அலேக்காக தூக்கி ஆட்டோவில் போட்டு பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்து அவளை ஒப்படைடித்துள்ளனர். போலீசார் விசாரிக்கையில் இதுவரை 8 பேரை திருமணம் செய்து லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றி, வரும் ஞாயிறு சிவகுமாரையும் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை கோவையை சேர்ந்த மற்ற நபரையும் திருமணம் செய்ய இருப்பதாக கூறியுள்ளார் சௌமியா.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்