Sun ,May 19, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

Madurai Local News : மீனாட்சி அம்மன் கோவிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டம்..!

Muthu Kumar May 05, 2022 & 18:53 [IST]
Madurai Local News : மீனாட்சி அம்மன் கோவிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டம்..!Representative Image.

Madurai Local News : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் அமைச்சர் அறிவித்தார். 

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது சென்னையை சேர்ந்த பக்தர் தமிழரசி ஆறுமுகம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலக புகழ் பெற்றது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அரசு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்க இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது என்றார்.

அன்னதானம் 

இங்கு பழங்காலத்தில் கோவில் அருகே உள்ள அன்னக்குழி மண்டபம் பகுதியில் மீனாட்சி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள் தோறும் அன்னதானம் வழங்கப்பட்டதாக கூறுவார்கள். அந்த கூற்றை தற்போது அரசு உண்மையாக்கி உள்ளது. மேலும் பழனி கோவிலுக்கு எப்போது சென்றாலும் அன்னதானம் சாப்பிடுவது போன்று இங்கும் காலை முதல் இரவு வரை வழங்க வேண்டும். அங்கு உள்ளது போன்று இங்கும் பெரியதாக அன்னதான கூடம் அமைக்க வேண்டும். 

பாராட்டு

தற்போது கோவிலுக்கு உள்ளூர் பக்தர்களை காட்டிலும் வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள். எனவே அவர்களது வயிற்று பசியை போக்கும் அரசின் இந்த நடவடிக்கைக்கு எனது பாராட்டுகள் என பொது மக்கள் தெரிவித்தனர்.

மதுரைவாசி தகவல்

மதுரையை சேர்ந்த சோலைராஜ் என்பவர் கூறுகையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் நான் வந்து செல்கிறேன். தற்போது மதியம் நேரத்தில் மட்டும் தான் அன்னதானம் குறைவான பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அரசு அறிவித்த நாள் முழுவதும் அன்னதானம் திட்டம் மூலம் அதிகமான பக்தர்கள் பயன் அடைய உள்ளனர். 

வெளியூர் பக்தர் தகவல்

காரைக்குடியை சேர்ந்த பரமேஸ்வரி கார்த்திக் கூறுகையில், நான் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மாதம் ஒருமுறை குழந்தையுடன் வந்து விடுவேன். 2 முறை மதியம் அன்னதானம் டோக்கன் வாங்கி சாப்பிட்டு உள்ளேன். மிகவும் நன்றாக இருக்கும். தற்போது காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்க உள்ளது மிகவும் பாராட்டுக்கு உரியது என்றார்.

மதுரை பக்தர் 

மதுரையை சேர்ந்த சரோஜா கூறுகையில், நான் தினமும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து செல்வேன். அடிக்கடி கோவிலில் அன்னதான பிரசாதத்தை நீண்ட வரிசையில் நின்று சாப்பிடுவேன். தற்போது அரசு அறிவித்துள்ள நாள் முழுவதும் அன்னதான திட்டம் பக்தர்கள் அனைவருக்கும் மிகவும் பாக்கியம். ஏன் என்றால் வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள். அவர்களுக்கு இந்த திட்டம் சென்றடைய வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்ய வேண்டும் என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்