Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு...பவானி, கூடுதுறையில் மக்கள் புனித நீராட தடை.!

madhankumar August 03, 2022 & 12:42 [IST]
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு...பவானி, கூடுதுறையில் மக்கள் புனித நீராட தடை.!Representative Image.

பவானி, காவிரி, அமுதநதி, ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை புனித நீராட சிறந்த தலமாக விளங்கி வருகிறது. இங்கு அம்மாவாசை நாட்களில் ஈரோடு மட்டுமில்லாமல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் புனித நீராட பொதுமக்கள் வருவது வழக்கம். அப்படி வருபவர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். 

ஈரோடு மாவட்டத்தில் நடக்கும் செய்திகளை அன்றாடம் உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது வாட்ஸ் அப் குழுவில் இணையுங்கள்

இங்கு திதி கொடுக்க வரும் மக்கள் அனைவரும் பரிகார பூஜை செய்துவிட்டு இந்த நதியில் புனித நீராடி செல்வர். இந்நிலையில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த நதியில் பொதுமக்கள் திதி கொடுத்து புனித நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது. கொரோனா தற்போது குறைந்து இருப்பதால் சில நாட்களுக்கு முன்பு ஆடி அமாவாசை முதல்நாள் அன்று புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு புனித நீராடினார்கள்.

இந்நிலையில் இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு புனித நீராட ஆயிரக்கணக்கான மக்கள் கூறுவார்களா என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அங்கங்கே தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 60 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே மேட்டூர் அணையானது தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதனால் மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து 1.40 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை நெருஞ்சிப்பேட்டை, பிபி அக்ரஹாரம், கருங்கல்பாளையம் காவிரிக்கரை, கொடுமுடி காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆடிப்பெருக்கை முன்னிட்டு புனித நீராட தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டுள்ளார். மேலும் விதிமுறையை மீறி புனித நீராடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி தெரியாமல் இன்று காலை பவானி கூடுதுறையில் புனிதநீராட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்