Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Erode latest news : பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்வு...! விவசாயிகள் மகிழ்ச்சி...!

Muthu Kumar July 07, 2022 & 12:45 [IST]
Erode latest news : பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்வு...! விவசாயிகள் மகிழ்ச்சி...!Representative Image.

Erode latest news : ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

பவானிசாகர் அணையில் இருந்து வரும் தண்ணீர் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2,47,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 84.37 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது. மேலும், இதனால், பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 5,527 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

மேலும், பவானிசாகர் அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 700 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 805 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. மேலும், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்