ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த கேகே வலசு பகுதியில் கரும்பு காட்டில் திடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சுமார் 2 ஏக்கர் கரும்பு பயிர்கள் எரிந்து சேதமடைந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த கேகே வலசு குளத்து தோட்டம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார்.
இந்நிலையில், குணசேகரன் கரும்பு காட்டில் கரும்பு பயிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் திடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தீ வேகமாக பரவி அருகில் உள்ள குமார் என்பவரது கரும்பு காட்டிலும் தீ பற்றி எரிய தொடங்கியது.
மேலும், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆமாலும், கரும்பு பயிர்கள் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…