Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று திறப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

Saraswathi Updated:
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று திறப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு Representative Image.

டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. காலை 9 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, அணையிலிருந்து தண்ணீரை திறந்துவிடவுள்ளார்.  

தஞ்சை, திருச்சி, நாகை, திருவாரூர் உள்ளிட்ட  டெல்டா மாவட்டங்கள் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது.  இந்த மாவட்டங்களில் ஆண்டு தோறும் குறுவை, தாளடி, சம்பா என்ற 3 பருவங்களும் நெல் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. இதற்கான தண்ணீர், சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படுகிறது. அந்த வகையில், ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதுவரை 18 முறை மட்டுமே திட்டமிட்டபடி ஜூன்12ம் தேதி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், நடப்பாண்டுக்கான குறுவை சாகுபடிக்கு இன்று (ஜூன்12) அணையிலிருந்து 19வது முறையாக திட்டமிட்டபடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதையொட்டி, மேட்டூர் அணையில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு அணையிலிருந்து பாசனத்திற்காக வலது கரையில் மேல்மட்ட மதகுகளை மின் விசையால் இயக்கி தண்ணீரை திறந்துவிடுகிறார்.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அணை திறப்பின்போது  விநாடிக்கு 3,000 கனஅடியாக திறக்கப்படும் தண்ணீர், இன்று மாலைக்குள் படிப்படியாக 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கடந்த 2 நாட்களாக சேலத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த அணை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று மாலை மேட்டூர் வந்து, அங்குள்ள நீர்வளத்துறை ஆய்வு மாளிகையில் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்