Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற கண்டெய்னர் லாரி..

Muthu Kumar August 05, 2022 & 17:50 [IST]
திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற கண்டெய்னர் லாரி..Representative Image.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டைஊசி வளைவுகள் உள்ளது. இந்நிலையில், இந்த மலைப்பாதை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணம் செய்கின்றனர். தமிழகம்-கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்து வழியாக இந்த மலைப்பாதை திகழ்கிறது.

இந்நிலையில், திம்பம் பாதையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. அதன்படி, இன்று காலை கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் சென்ற கண்டெய்னர் லாரி  9வது கொண்டைஊசி வளைவில் திரும்பும் போது பழுதாகி நின்றது. இதனால் வாகனங்கள் ஏதும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து, பண்ணாரியில் இருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு பழுது நீக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இதனால் திம்பம் மலைப்பாதையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்