Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Erode latest news : பண்ணாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்..!

Muthu Kumar May 30, 2022 & 16:35 [IST]
Erode latest news : பண்ணாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்..!Representative Image.

Erode latest news : ஈரோடு மாவட்த்தில் உள்ள பண்ணாரியம்மன் கோவிலில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணகான பக்தர்கள் குவிந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

வைகாசி அமாவாசை
 
இந்நிலையில், வைகாசி அமாவாசையை யொட்டி இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் பண்ணாரியம்மன் கோவிலில் குவிந்தனர். அதன்படி, இன்று பண்ணாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து பண்ணாரி அம்மனுக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

பண்ணாரியம்மன் கோவில்

இந்நிலையில், இன்று பண்ணாரியம்மன் கோவிலுக்கு ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் மாவட்டம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று கோவிலுக்கு வந்துள்ளனர்.

பக்தர்கள்

மேலும் அண்டை மாநிலமான கர்நாடகாவின் மைசூர், சாம்ராஜ் நகர் உள்பட பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் தரிசனத்திற்காக குவிந்தனர். இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செயும் நிலை ஏற்பட்டது.

வேண்டுதல்

இதனைதொடர்ந்து பண்ணாரியம்மன் கோவிலின் முன்பு உள்ள குண்டம் இறங்கும் இடத்தில் மஞ்சள், மிளகு, உப்பு போட்டு வேண்டுதலை நிறைவேற்றினர். இதனால் பண்ணாரியம்மன் கோவில் முழுவதும் கூட்டம் அலை மோதியது. மேலும் கோவிலுக்கு வந்த அணைத்து பக்தர்களுக்கும் கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

பவானி கூடுதுறை

இதே போல், பவானி கூடுதுறைக்கு அமாவாசையை யொட்டி சேலம், கோவை, திருப்பூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இன்று காலை முதல்  வந்த ஏராளமான பொதுமக்கள் நீராடினர். மேலும், அங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுத்து சென்றனர்.

இதனையடுத்து, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் வந்த பக்தர்கள் புனித நீராடி சங்க மேஸ்வரரை வழிபட்டனர். இதனால் பவானி கூடுதுறையில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்