Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

புதிய வகை நாப்கின் கண்டுபிடிப்பு..! ரூ.1 லட்சம் பரிசுத் தொகையை வென்ற ஈரோடு கல்லூரி மாணவர்கள்…!

Gowthami Subramani September 07, 2022 & 16:40 [IST]
புதிய வகை நாப்கின் கண்டுபிடிப்பு..! ரூ.1 லட்சம் பரிசுத் தொகையை வென்ற ஈரோடு கல்லூரி மாணவர்கள்…!Representative Image.

ஈரோடு கொங்கு பொறியியல் கல்லூரி மாணவர்கள், புதிய வகை நாப்கினைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தப் புதிய கண்டுபிடிப்புக்கு மத்திய அரசு ரூ.1 லட்சம் பரிசு வழங்கியுள்ளது.

ஸ்மார்ட் இந்திய ஹேக்கத்தான் (Smart India Hackathon - SIH)

மத்திய அரசு, இந்தியாவில் புதிய பொருள்களைக் கண்டுபிடித்தல் மற்றும் ஸ்டார்ட் அப் உருவாக்குதல் நோக்கத்தோடு, இந்திய அளவில் ஸ்மார் இந்தியா ஹேக்கத்தான் என்ற போட்டியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களிலிருந்து கலந்து கொண்டு புது வித பொருள்களைக் கண்டுபிடித்து தங்களது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர்.

எஸ்ஐஹெச் 2022 (SIH 2022)

அதன் படி, இந்த நடப்பு ஆண்டிற்கான ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி கடந்த இந்தியா முழுவதும் 75 முனை மையங்களில் நடைபெற்றது.

இதில், பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த ஏ.பிரியங்கா, யூ.தினகரன், ஆர்.குகன், எஸ்.சுப்புராஸ், கே.ஆர்.பிரணவ், எஸ்.மேகவர்ஷினி போன்ற மாணவர்கள் கலந்து கொண்டர். இவர்கள், பிரணவ் சங்கரன், ஜி.முஜைஸ்தீன் போன்ற பேராசிரியர்களின் வழிகாட்டுதலின் மூலம் இருபுறமும் பயன்படுத்தக் கூடியவாறு அமையும் சானிடரி நாப்கின்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

இயற்கையான முறையில்

இரு புறமும் பயன்படுத்தக் கூடிய இந்த நாப்கின்கள் சுகாதாரமானதாகவும், சுற்றுச்சூழலுக்கு ஏற்புடையதாகவும் அமையும். இது இயற்கையான பைபரால் செய்யப்பட்டதாகும். இதனைப் பொறுத்த வரை அதிகப்படியான நாப்கின்களை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை எனக் கூறுகின்றனர்.

அதன் படி, சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் இருக்கும் பிலாய் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் நடைபெற்ற SIH 2022 நிகழ்வில் இவர்களின் இந்த சிறப்பான கண்டுபிடிப்புக்கு ரூ.1 லட்சம் பரிசு கிடைத்தது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்