Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Erode News Tamil:  ஈரோடு மாவட்டத்தின் மாபெரும் கோயில் திருவிழாக்கள்!

Nandhinipriya Ganeshan March 09, 2022 & 18:45 [IST]
Erode News Tamil:  ஈரோடு மாவட்டத்தின் மாபெரும் கோயில் திருவிழாக்கள்!Representative Image.

Erode News Tamil: கொரோனா காரணமாக அனைத்து இடங்களிலும் கோயில் பண்டிகைகள், திருவிழாக்கள் எல்லாம் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பெரிய கோயில்களிலும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திருவிழாக்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். சென்ற வாரம் தான் ஈரோட்டில் மிகவும் பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை வருகின்ற மார்ச் 15 ஆம் தேதி நடத்த உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை அறிவித்திருந்தது. அதேபோல் ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள செல்லியாண்டியம்மன் திருக்கோயில் திருவிழா கடந்த மார்ச் 2 ஆம் தேதி வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா

 

 

அந்தியூர்: இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில், நடப்பாண்டு குண்டம் விழா நடக்கிறது. அந்தியூரில் பிரசித்தி பெற்ற பத்ர காளியம்மன் கோவிலில் (anthiyur pathirakali amman), இந்தாண்டு பங்குனி உத்திர திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, வருகின்ற 17 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. 23 ஆம் தேதி மகிஷாசூரமர்த்தனம் நிகழ்ச்சியும், 29 ஆம் தேதி கிராமசாந்தி நிகழ்ச்சியும், 30 ஆம் தேதி கோவிலில் கொடியேற்றும் நிகழ்ச்சி, 31 ந் தேதியில் இருந்து ஏப்ரல் 5 ந் தேதி வரை அம்மன் தேர் வீதி உலாவும் நடக்கிறது. அப்பண்டிகையில், முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா 6 ஆம் தேதி நடைபெறுகிறது. அதேசமயம் கலை நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தக்கூடாது என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னிமலை முருகன் கோவில் திருவிழா

 

 

சென்னிமலை: பல நூறு ஆண்டுகளுக்கு முன் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1749 அடி உயரத்தில் பசுமை நிறைந்த மரங்களாலும், மூலிகை குணம் கொண்ட செடிகளாலும் சூழப்பட்ட அழகிய வனப்பகுதியில் அமைந்துள்ளது. இது வள்ளி-தெய்வானை இருவரும், முருகப்பெருமானை திருமணம் செய்வதற்காக, அமிர்தவல்லி-சுந்தரவல்லி என்ற பெயரில் தவம் செய்த சிறப்புமிக்க(sennimalai murugan temple) ஆலயம். மேலும், கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பங்குனி உத்திர தேரோட்டம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு பங்குனி உத்திர தேரோட்டம் வருகிற 18 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 

இதுபோன்ற தகவல்களை தெரிந்துக்கொள்ள Search Around Web என்ற Tamil வலைதளப்பக்கத்தை தொடர்ந்திருங்கள்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்