Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Erode latest news : ஈரோட்டில் போலி மருத்துவர்..? 10 வகுப்பு படித்த டாக்டர்..!

Muthu Kumar June 06, 2022 & 11:30 [IST]
Erode latest news : ஈரோட்டில் போலி மருத்துவர்..? 10 வகுப்பு படித்த டாக்டர்..!Representative Image.

Erode latest news : ஈரோடு மாவட்டம் கொளப்பலூரை சேர்ந்த 75 வயது முதியவர் அப்பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனை நடத்தி வருகிறார்.Erode latest news : ஈரோடு மாவட்டம் கொளப்பலூரை சேர்ந்த 75 வயது முதியவர் அப்பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்நிலையில், இந்த முதியவர் 10 ம் வகுப்பு வரை மட்டுமே படித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, இந்த முதியவர் ஆயுர்வேத சிகிச்சை அளிப்பதாக கூறி பொது மக்களுக்கு பல ஆண்டுகளாக ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மருத்துவ படிப்பு படிக்காமல் அந்த முதியவர் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் அப்புராஜ், அயலூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தலைமையில் சுகாதாரத்துறை மற்றும் போலீசார் அந்த முதியவர் நடத்தி வந்த மருத்துவ மனைக்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் முதியவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

காவலர்கள் மேற்கொண்ட சோதனையில், காலி மருந்து குப்பிகள், பயன்படுத்தப்பட்ட ஊசி, ரத்த அழுத்தம் பார்க்கும் கருவி ஆகிய பொருட்களை கைபற்றினர். இதனையடுத்து, அவரிடம் போலீசார் மற்றும் மருத்துவ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த முதியவர் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து ஆயுர்வேத சிகிச்சை அளிப்பதாக கூறிக்கொண்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து மருத்துவ மனையில் இருந்த காலி மருந்து பாட்டில்களை சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், அந்த முதியவரிடம் ஆயுர்வேத சிகிச்சை குறித்து முறையான படித்துள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என சுகா தாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்