Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

Erode latest news : ஈரோட்டில் மாபெரும் தடுப்பூசி முகாம்..! எங்கு..? எப்போது..?

Muthu Kumar June 09, 2022 & 16:15 [IST]
Erode latest news : ஈரோட்டில் மாபெரும் தடுப்பூசி முகாம்..! எங்கு..? எப்போது..? Representative Image.

Erode latest news : ஈரோடு மாவட்டத்தில் வருகிற 12-ந் தேதி 3,194 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, இந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள், 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை மட்டும் 2-ம் தவணை தடுப்பூசி இலவசமாக செலுத்தி வருகின்றனர். மேலும், 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட முன் களப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தி கொள்கின்றனர்.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் வருகிற 12-ந் தேதி அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் என மொத்தம் 3,194 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை நடைபெறும். மேலும், 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் முழுவதும் நடைபெறும் இந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் 4260 பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். அதற்காக 67 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஈரோட்டில் நடைபெறும் மாபெரும் தடுப்பூசி முகாமில் இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் கலந்து கொண்டு தடுப்பூசியை செலுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்ச்சியர் கிருஷ்ணனுண்ணி கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்