Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 74,319.00
466.06sensex(0.63%)
நிஃப்டி22,567.95
165.55sensex(0.74%)
USD
81.57
Exclusive

Erode latest news : ஈரோட்டில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு..?

Muthu Kumar June 06, 2022 & 10:25 [IST]
Erode latest news : ஈரோட்டில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு..?Representative Image.

Erode latest news : தமிழகத்தில் இயங்கி வரும் அணைத்து பள்ளி வாகனங்களின் தரம் மற்றும் பராமரிப்பு குறித்து ஆண்டு தோறும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு சான்றிதழ் வழங்குவது வழக்கம்.

இந்நிலையில், ஜூன் 13-ந் தேதி தமிழகம் முழுவதும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனையடுத்து, ஈரோடு மாவட்டம் உள்பட தமிழகத்தில் உள்ள அணைத்து மாவட்டங்களிலும் தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

அதன்படி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டார போக்குவரத்து எல்லைக்குட்பட்ட சத்தியமங்கலம், பவானி பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கான வாகன சோதனை ஒத்தக்குதிரை அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

மேலும், கோபிசெட்டிபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் முனுசாமி தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையில் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. பிரியதர்ஷினி கலந்து கொண்டு வாகனங்களை ஆய்வு செய்தார்.

இந்த சோதனையில் கலந்துகொண்ட பிரியதர்ஷினி பள்ளி வாகனங்கள் அரசின் விதிமுறைகளின் படி வேக கட்டுப்பாட்டு கருவி மற்றும் அவசரகால வழி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் இயக்கப்படுகிறதா? என நேரில் ஆய்வு செய்தார். மேலும், இந்த ஆய்வின் முடிவில் தகுதியான வாகனங்களுக்கு தகுதிச்சான்றிதழ்கள் வழங்கினார்.

இதனையடுத்து, இந்த வாகன ஆய்வில் கோபிசெட்டிபாளையம் சத்தியமங்களம் மற்றும் பவானி பகுதிகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டு வரப்பட்டன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்