Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

600 ஆண்டுகள் பழமையான மரங்களை வெட்டுவதா - போராட்டத்தால் பரபரப்பு!

Abhinesh A.R Updated:
600 ஆண்டுகள் பழமையான மரங்களை வெட்டுவதா - போராட்டத்தால் பரபரப்பு!Representative Image.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை எதிர்த்து விவசாய சங்கத்தினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது. இதற்கு காரணம் சாலையில் இருந்த பழங்கால மரங்கள் தான் என்று கூறப்படுகிறது.

இந்த சாலை விரிவாக்க பணிகளுக்காக சாலையோரம் இருந்த சுமார் 27 மரங்களை வெட்ட மதுரை மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கப்பட்டது. தற்போது இந்த மரங்களை வெட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. இச்சூழலில், மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து உசிலம்பட்டி 58 கால்வாய் விவசாய சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க விவசாயிகள் இணைந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல்நிலைய காவலர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தினர். பலமணிநேரம் போராட்ட காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பந்தபட்ட பிரச்னை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. யாரும் எதிர்பார்த்திராத நிலையில் சாலையில் போராட்டகாரர்கள் கூடியதால், அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்