Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தொழிலாளர்கள் சொந்த வீடு கட்டுவதற்கு ரூ.4 லட்சம் நிதி உதவி.. எப்படி விண்ணப்பிப்பது?

Nandhinipriya Ganeshan September 13, 2022 & 11:10 [IST]
தொழிலாளர்கள் சொந்த வீடு கட்டுவதற்கு ரூ.4 லட்சம் நிதி உதவி.. எப்படி விண்ணப்பிப்பது?Representative Image.

தமிழக அரசின் உத்தரவின் பேரில் தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்டுவதற்கு நிதி வழங்கப்படுகிறது. இதில் சொந்தமாக வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்கள் சொந்தமாக வீட்டுமனை வைத்திருந்தால், அவர்களாகவே வீடு கட்டி கொள்வதற்கும் அல்லது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்டு உள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற நிதி உதவி அளிப்பதற்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி, கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.4 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படும் என்று ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையாளர் முருகேசன் தெரிவித்து உள்ளார். 

தகுதி:

இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்று 3 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து புதுப்பித்து உள்ள தொழிலாளர்களாக இருக்க வேண்டும்.

தகுதியான கட்டுமான தொழிலாளர் சொந்த வீட்டுமனை வைத்து இருந்தால், 300 சதுர அடி அல்லது 28 சதுர மீட்டர் அளவில் வீடு கட்டுவதற்கான இடவசதி இருக்க வேண்டும். 

அல்லது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்டு உள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற நிதி உதவி ரூ.4 லட்சம் வரை வழங்கப்படும்.

இதில் பயன்பெறும் கட்டுமான தொழிலாளருக்கோ, அவரது குடும்பத்தினருக்கோ சொந்தமாக கான்கிரீட் வீடு இருக்கக்கூடாது. கட்டுமான தொழிலாளியின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.

வேறு எந்த மத்திய, மாநில அரசு சார்ந்த இலவச வீட்டு வசதி திட்டத்தில் பயன்பெற்றிருக்க கூடாது.

சொந்தமாக வீடு கட்ட விரும்பும் தொழிலாளர்களின் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினருடன் இணைந்ததாகவோ பட்டா இருக்க வேண்டும். 

அதில் எந்தவித சட்ட சிக்கல்களும், வில்லங்கமும் இருக்க கூடாது. நிலத்தின் உரிமைக்கான பட்டா முறையாக பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பம்:

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் தொழிலாளர்கள் கீழ்க்காணும் சான்றுகளை கொண்டிருக்க வேண்டும்.

  • வாரிய உறுப்பினர் பதிவு அட்டை
  • குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை
  • உங்களுடைய ஆதார் அட்டை
  • ரேஷன் கார்டு
  • வங்கி கணக்கு புத்தக நகல்
  • வாக்காளர் அடையாள அட்டை
  • வருமான வரி சான்றிதழ் 
  • ஒரு புகைப்படம்

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தை அணுகவும். 

மேலும் விபரங்களுக்கு: 0424 2275591, 0424 2275592 (தொழிலாளர் உதவி ஆணையாளர் அலுவலகம்)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்