Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ராணிப்பேட்டை அருகே 5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் - 5 பேர் கைது!

Abhinesh A.R Updated:
ராணிப்பேட்டை அருகே 5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் - 5 பேர் கைது! Representative Image.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே வாணியன் சத்திரம் பகுதியில் காவல்  ஆய்வாளர் மணிமாறன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.  அப்போது அந்த வழியாக வந்த வெள்ளை நிற காரை நிறுத்தி சோதனையிட்டதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ் மற்றும் கூல் லிப் என 29 மூட்டைகளில் 164 கிலோ போதை தரும் பாக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் காரில் இருந்த ரொக்கம் ரூ. 5 லட்சத்து 70 ஆயிரம்  பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தியதாக ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தைச் சேர்ந்த வீராராம்( 37), ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் போலீஸ் லைன் தெருவை சேர்ந்த அக்பர் பாஷா (49 ), பனப்பாக்கம் பெரிய தெருவை சேர்ந்த செல்வம் (29),  ஹரிதாசன் (38), பனப்பாக்கம் அடுத்த ஜாகீர்தண்டலத்தை சேர்ந்த கோபி (29) ஆகிய 5  பேரை போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பாக மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். போலீசார் பறிமுதல் செய்த புகையிலை பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 3 லட்சம்.  அது மட்டுமன்றி காரில் வைத்திருந்த ரூ. 5 லட்சத்து 70 ஆயிரம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் காவேரிப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் எந்தெந்த பகுதிகளுக்கு புகையிலை பொருட்கள் கடத்தி செல்லப்படுகிறது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்