Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

900 கோடி அப்பேஸ்.. என்னாமா ஸ்கெட்ச் போட்டுருக்காங்க! 

Nandhinipriya Ganeshan [IST]
900 கோடி அப்பேஸ்.. என்னாமா ஸ்கெட்ச் போட்டுருக்காங்க! Representative Image.

அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக hijayu என்ற நிறுவனம் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  அதிக வட்டி தருவதாக கூறி மோசடி செய்யும் நிறுவனங்களை கண்காணித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அதன்படி, ஐஎப்எஸ், ஆருத்ரா உள்ளிட்ட நிறுவனங்கள் ரூ.10,000 கோடி மோசடி செய்ததாக சமீபத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நிறுவனத்தின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, சென்னையை சேர்ந்த ஹிஜாவு என்ற நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தல் மாதம் ரூ.15,000 வட்டி தருவதாக கூறி ஆயிரக்கணக்கான பேரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளது. ஆனால், கடந்த சில மாதங்களாகவே வட்டி தராமல் இழுக்கடிக்கவே, சந்தேகமடைந்த முதலீட்டாளர்கள் அசோக் நகர் பொருளாதார குற்றைப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். 

முதலீட்டாளர்கள் அளித்த புகாரின்பேரில் ஹிஜாவு குழும தலைவர் சவுந்தரராஜன் மற்றும் நிர்வாக இயக்குனர் அலெக்சாண்ட உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. விசாரணையில், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் எண்ணெய் கிணறு வைத்திருப்பதாகவும், மக்களிடம் வசூல் செய்யும் பணத்தை அந்த நிறுவனங்களில் முதலீடு செய்து லாபம் பார்த்து வருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்