Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாணவர்களே…! உங்களுக்கான விலையில்லா மிதிவண்டிகள்…. ரெடியாகிக்கோங்க....!

Gowthami Subramani [IST]
மாணவர்களே…! உங்களுக்கான விலையில்லா மிதிவண்டிகள்…. ரெடியாகிக்கோங்க....!Representative Image.

தமிழக அரசு, பள்ளி மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி அவர்களின் தலைமையில், மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக விளங்கும் முத்துசாமி அவர்கள் கலந்து கொண்டு பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவிகள் 335 பேருக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கினார்.

மேலும், இதில் பேசிய அவர், ஈரோடு மாவட்டத்தில் 127 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் மொத்தம் 17,553 பேருக்கு மிதி வண்டிகள் வழங்கும் என கூறியுள்ளார். மாணவிகளின் நலனுக்காக, புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்துள்ளார்.

இந்தப் பள்ளியில் கடந்த ஆண்டு மூன்று மாணவிகள் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த நிகழ்ச்சியில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக விளங்கும் திருமகன் ஈவேரா, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேச மூர்த்தி, மேயர் நாகரத்தினம் சுப்ரமணியம் மற்றும் துணை மேயர் செல்வராஜ், முதன்மை கல்வி அதிகாரியான அய்யனன் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Free Bicycle Scheme in Tamilnadu 2022, Free Bicycle Schemes for Students, Free Cycle for School Students in Tamilnadu in Tamil, How to Get Free Bicycle in India 2022, Free Cycle for School Students in Tamilnadu Government, Free Bicycle Scheme in India, How to Get Free Bicycle in Tamilnadu 2022


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்