Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Erode flash news : சிறுமி கருமுட்டை விவகாரம்... சாட்டையை சுழற்றிய அமைச்சர்..!

Muthu Kumar July 14, 2022 & 00:00 [IST]
Erode flash news : சிறுமி கருமுட்டை விவகாரம்... சாட்டையை சுழற்றிய அமைச்சர்..!Representative Image.

Erode flash news : ஈரோடு சிறுமியின் கருமுட்டையை பெற்ற 4 மருத்துவமனைகளுக்கு சீல் வைக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தானம் என்ற பெயரில் சிறுமியிடம் கருமுட்டை சட்டத்துக்கு புறம்பாக விற்பனை நடந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வழக்கில் சிறுமியின் தாயார், தாயாரின் காதலன், புரோக்கராக செயல்பட்ட மாலதி மற்றும் போலி ஆதார் அட்டை வழங்கிய ஜான் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர், இதுதொடர்பாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் போலீசார் மற்றும் தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் தலைவர் தலைமையிலான சிறப்பு குழு அமைத்து தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. 

மேலும், இந்த விசாரணையில் அதிகாரிகளிடம் தகவல்கள், ஆவணங்களை சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் அளிக்கவில்லை என விசாரணை குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ஈரோடு சிறுமியிடம் பலமுறை கருமுட்டைகளை எடுத்திருக்கிறார்கள். இதன் சாதக, பாதகங்கள் குறித்து சிறுமிக்கு சொல்லப்படவும் இல்லை. மேலும், போலியான ஆதார் அட்டை என தெரிந்தும் மருத்துவமனைகள் பயன்படுத்தி உள்ளது  மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.

சிறுமி கருமுட்டை தொடர்பான வழக்கில் விசாரணையில் எங்களது சிறப்பு குழு கேட்ட பல ஆவணங்களை மருத்துவமனைகள் அளிக்கவில்லை. இதனால், சம்பந்தபட்ட 4 மருத்துவமனைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அந்த மருத்துவமணையில் உள்ள நோயாளிகளை 14 நாட்களுக்குள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், கருமுட்டை விவகாரம் தொடர்பான மருத்துவமனைகளுக்கு அளிக்கப்பட்ட அரசு மருத்துவ காப்பீடு உரிமம் ரத்து செய்யப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்