Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மீன்பிடி ஏலத்தை தடை செய்ய சாத்தியm உள்ளதா? - உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

Surya Updated:
மீன்பிடி ஏலத்தை தடை செய்ய சாத்தியm உள்ளதா? - உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!Representative Image.

தஞ்சாவூர் மாவட்டம் உடையாளூரைச் சேர்ந்த இளையராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவில், தங்கள் ஊரில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான 5 குளங்களில், மீன்களை பிடிப்பதற்கு ஏலம் விடப்பட்டிருப்பதாகவும், அந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு  முன்பு விசாரணைக்கு வந்தது. முன்பெல்லாம் ஒரு குளத்து நீரை குடிக்கவும், மற்றொரு குளத்து நீரை கால்நடைகளை குளிப்பாட்டவும் பயன்படுத்தியதாகவும், தற்போது கால்நடைகளை மினரல் வாட்டர் கொண்டு குளிப்பாட்டும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். குளத்தை ஏலம் எடுத்தவர்கள் நீர் வற்றாமல் இருக்க வேதிப்பொருட்களை கலப்பதால், குளத்து நீர் நிலத்தடி நீராக மாறுவதில்லை எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும், உடையாளூர் கிராமத்தில் உள்ள 5 குளங்களுக்கும் மீன்பிடி ஏல அறிவிப்புக்கு தடை விதித்து, மாநிலம் முழுவதும் உள்ள குளங்களில் வணிக நோக்கில் செயல்படும் மீன்பிடி ஏலத்தை தடை செய்வது குறித்து பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்