Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

மொத்தம் 164 நாடுகளில்...கரூர் அரசு பள்ளி மாணவன்...இளம் ஐன்ஸ்டீன் பட்டம் வென்று சாதனை!

Priyanka Hochumin September 16, 2022 & 13:40 [IST]
மொத்தம் 164 நாடுகளில்...கரூர் அரசு பள்ளி மாணவன்...இளம் ஐன்ஸ்டீன் பட்டம் வென்று சாதனை!Representative Image.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கும் வரட்சியான பகுதிகளில் ஒன்று பஞ்சப்பட்டி. அங்கு செயல்பட்டு கொண்டிருக்கும் அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் இருந்து தனபால் என்னும் ஆசிரியர் வழிகாட்டுதலுடன் 11-ம் வகுப்பு படிக்கும் பூவரசன் என்ற மாணவர் சர்வதேச அளவில் `இளம் ஐன்ஸ்டீன்' விருது பெற்றிருக்கிறார்.

உங்களுள் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் உள்ளது. பெங்களூரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் "சமுதாய புதுமை கண்டுபிடிப்புகளுக்கான நிலையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இளைஞர்களின் முயற்சி" என்ற தலைப்பில் சர்வதேச அளவிலான அறிவியல் கண்காட்சி கடந்த 10, 11 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மொத்தம் 164 நாடுகளில் இருந்து மத்திய, மாநில பாடத்திட்டத்தில் பயிலும் அனைத்து பள்ளிகளில் இருந்து 43 படைப்புகள் சர்வதேச அளவில் பங்குபெற்றன.

அதில் இந்தியாவில் இருந்து மொத்தம் 31 படைப்புகளும் சர்வதேச நாடுகளான இந்தோனேஷியா, உகாண்டா, எகிப்து ஆகிய நாடுகளில் இருந்து 12 என மொத்தம் 43 படைப்புகளை கண்டுபிடித்த மாணவர்கள் காட்சிப்படுத்தினர். இதில் கரூர் பஞ்சப்படியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் பூவரசன் மற்றும் யுவராஜ் தங்கள் ஆசிரியர் தனபால் வழிகாட்டுதலுடன் தமிழக அளவில் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து, நடந்த சர்வதேச கண்காட்சியில் கலந்துகொண்டனர்.

பூவரசன் கண்டுபிடிப்பு - அலைபேசி ப்ளூடூத் மூலம் ரோபோவை கட்டுப்படுத்தும் இயந்திரத்தை காட்சியளித்தார்.

யுவராஜின் கண்டுபிடிப்பு - இலக்கை கண்டுபிடிக்கும் ரோபோவை உருவாக்கி அதனை காட்சியளித்தார்.

இதில் பூவரசனின் கண்டுபிடிப்பு சர்வதேச அளவில் மூன்றாம் பரிசாக மரியாதையுடன் குறிப்பிடும் இளம் ஐன்ஸ்டீன் என்ற பாராட்டு சான்றிதழ் மற்றும் பங்கேற்பு சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டது. அரசு பள்ளி மாணவனாக அனைத்து அரசு பள்ளிக்கும், தமிழகத்திற்கும் பெரும் கௌரவத்தை அளித்துள்ள பூவரசனுக்கு அனைவரும் தங்களின் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்