Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பாஜகவின் பாதயாத்திரைக்கு அனுமதி.. மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு!!

Sekar August 03, 2022 & 12:04 [IST]
பாஜகவின் பாதயாத்திரைக்கு அனுமதி.. மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு!!Representative Image.

விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைக்க வலியுறுத்தி பாஜக நடத்த திட்டமிட்டுள்ள பாத யாத்திரைக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை அனுமதி வழங்கியுள்ளது. எனினும் அனுமதியோடு சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

விருதுநகரில் ஜவுளிப் பூங்கா அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கி பல ஆண்டுகளாக ஆகியும், திட்டத்திற்கு நிலம் ஒதுக்கி செயல்படுத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், இது தொடர்பாக 1,000 பேருடன் பாதயாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டது.

இதற்கு அனுமதி கேட்டு சிவகாசி டிஎஸ்பியிடம் பாஜக அளித்த மனுவை டிஎஸ்பி நிராகரித்தார். இதனால் அதிருப்தியடைந்த பாஜகவின் விருதுநகர் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சாந்தகுமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சிவஞானம், டிஎஸ்பி பாத யாத்திரையை நிராகரித்தது தவறு என்றும் டிஜிபியின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பாத யாத்திரைக்கு அனுமதி வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

இந்நிலையில், தீர்ப்பை எதிர்த்து சிவகாசி டிஎஸ்பி மற்றும் விருதுநகர் எஸ்பி தரப்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், எஸ்.ஸ்ரீமதி அமர்வு முன்பு அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது 1,000 பேருடன் பாத யாத்திரை நடத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில், " ஆகஸ்ட் 6 ஆம் தேதி பாத யாத்திரை நடத்தலாம். ஆனால் 27 கி.மீ.க்கு பதிலாக 2 கி.மீ. மட்டுமே நடத்த வேண்டும். 

மேலும் அதில் 1,000 பேருக்கு பதிலாக, 300 பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். பாத யாத்திரை துவங்கிய இடத்திலிருந்து 2 கி.மீ. முடிந்தபின் வாகனத்தில் ஏறி கலெக்டர் அலுவலகம் செல்ல வேண்டும்.அங்கு 10 பேர் மட்டும் கலெக்டரிடம் சென்று மனு அளிக்கலாம். இதை மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் காலை 10 மணி முதல், மதியம் 1 மணிக்குள் நடத்த வேண்டும்." எனத் தீர்ப்பளித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்