Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆத்தூரில் காணாமல் போன விவசாயி கிணற்றில் சடலமாக மீட்பு - உறவினர்கள் அதிர்ச்சி

Saraswathi Updated:
ஆத்தூரில் காணாமல் போன விவசாயி கிணற்றில் சடலமாக மீட்பு - உறவினர்கள் அதிர்ச்சிRepresentative Image.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காணாமல் போனதாகத் தேடப்பட்ட விவசாயி வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன்(வயது51). இவர் தென்னங்குடிபாளையம் செல்லும் சாலையில் அசோகன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி பாப்பாத்தி. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். மகளுக்கு திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருவதால் கஜேந்திரன் மற்றும் அவரது மனைவி பாப்பாத்தி ஆகிய இருவரும் விவசாய தோட்டத்தில் உள்ள வீட்டில்  வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் விவசாய தோட்டத்தில் உள்ள வீட்டில் இரவு 12:30 மணி வரை பேசிக்கொண்டு இருந்துள்ளனா். பிறகு மனைவி வீட்டின் உள்ளே சென்று உறங்கியுள்ளனர். காலையில் பாப்பாத்தி எழுந்து பார்த்தபோது கஜேந்திரனை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி பாப்பாத்தி உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து பல்வேறு இடங்களில் தேடிய நிலையில், ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் கணவரை காணவில்லை என புகாரும் அளித்தார்.

அதன்பேரில்  நகர போலீசார் வழக்கு பதிவு செய்து கஜேந்திரனை தேடி வந்தனர். இந்த நிலையில் அவரது விவசாய தோட்டத்தில் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் மர்மமான முறையில் கஜேந்திரன் உயிரிழந்திருப்பதை கண்டு அதிர்ச்சடைந்த உறவினர்கள், ஆத்தூர் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து கஜேந்திரனின் உடலை மீட்டனர். 

ஆத்தூர் நகர போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கஜேந்திரனின் உடலை அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த நகர போலீசார் கஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்