Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழர்களைப் போல் தமிழில் பேசுவேன்.. ஈரோட்டில் தமிழில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி!!

Sekar August 03, 2022 & 15:31 [IST]
தமிழர்களைப் போல் தமிழில் பேசுவேன்.. ஈரோட்டில் தமிழில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி!!Representative Image.

தமிழர்களை போல தானும் தமிழ் பேச வேண்டும் என்பதையே தன்னுடைய விருப்பம் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் அவரது முழு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தினார்.

ஈரோடு மாவட்டத்தில் நடக்கும் செய்திகளை அன்றாடம் உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது வாட்ஸ் அப் குழுவில் இணையுங்கள்

அங்கு பின்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பண்ணன் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து அரச்சலூரில் உள்ள ஜெயராமபுரத்தில் கொங்கு சமூக ஆன்மீக கல்வி கலாச்சாரம் மற்றும் தீரன் சின்னமலை கூட்டமைப்பு சார்பில் நடக்கும் தீரன் சின்னமலை நினைவேந்தல் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகத் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். 

அப்போது பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்த விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் எனத் தெரிவித்தார். மேலும் தீரன் சின்னமலை சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் எனத் தெரிவித்த அவர், சுதந்திரத்திற்காக அவர் உயிரைத் தியாகம் செய்தார் எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவின் விடுதலைக்காக உயிரைக் கொடுத்தவர்களை எப்போதும் மறக்கக்கூடாது என்றும், சிறந்த பாரத்தை உருவாக்குவதே தீரன் சின்னமலைக்கு நாம் செலுத்தும் நன்றி எனத் தெரிவித்தார். 

பின்னர், தமிழ் மிக பழமையான மொழி எனத் தெரிவித்த அவர், தமிழ் மக்களைப் போல் தமிழ் பேச வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பம் எனத் தெரிவித்த அவர், ஒருநாள் நிச்சயம் தமிழில் நன்றாக பேசுவேன் எனத் தமிழில் கூறினார். 

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தவத்திரு சாந்தலிங்க மருதாசலம் அடிகளார் மற்றும் ராமானந்த குமரகுரு சாமிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்