Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாமன்னன் படத்திற்கு எதிர்ப்பு - மதுரையில் திரையரங்கை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்!

Saraswathi Updated:
மாமன்னன் படத்திற்கு எதிர்ப்பு - மதுரையில் திரையரங்கை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்! Representative Image.

உதயநிதி நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் நேதாஜி சுபாஷ் சேனை, முக்குலத்தோர் எழுச்சிக்கழகம் அமைப்பினர் திரையரங்கை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்திர்ல ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.  இதையடுத்து, மாமன்னன் திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஸ் ஃப்கத் பாசில் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது.  இந்த திரைப்படம் வெளியாகும் முன்பே, சாதி ரீதியிலான உணர்வுகளைத் தூண்டும் வகையிலான காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின.  இதையடுத்துஅகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர், முக்குலத்தோர் எழுச்சிக் கழகம் ஆகியவை மாமன்னன் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துதென்மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் கண்டன போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தின. 

தமிழகத்தில் ஜாதி மோதல்களை மாமன்னன் திரைப்படம் உருவாக்குவதாகவும், அதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த எதிர்ப்புகளை மீறி, மதுரையில் 10க்கும் மேற்பட்ட திரையரங்குகளில்  மாமன்னன் திரைப்படம் வெளியாகி உள்ளது.  மதுரை செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் சினிமாவில் முதல் காட்சியாக 9 மணிக்கு மாமன்னம் திரைப்படம் வெளியான நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேதாஜி சுபாஷ் சேனை, முக்குலத்தோர் எழுச்சிக்கழகம் அமைப்பை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் திரையரங்கம் முன்பு முற்றுகையிட முயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் கைது செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மாமன்னன் திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்கங்கள் முன்பு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடுதிரையரங்கங்கிள்ன முன்பு யாரும் தேவையின்றி நிற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்