Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உசிலம்பட்டி அருகே முதலைக்குளம் கிராமத்தில் மீன் பிடித் திருவிழா - மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்!

Saraswathi Updated:
உசிலம்பட்டி அருகே முதலைக்குளம் கிராமத்தில் மீன் பிடித் திருவிழா - மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்! Representative Image.

உசிலம்பட்டி அருகே முதலைக்குளம் கிராமத்தில் மீன் பிடித்திருவிழா நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டு உற்சாகமாக மீன்களை பிடித்து சென்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்தது முதலைக்குளம் கிராமம். இக்கிராமத்தில் நடுமுதலைக்குளம்-கஸ்பா முதலைக்குளம்- கீழப்பட்டி-ஒத்தவீட்டுபட்டி- குளத்துப்பட்டி-கொசவபட்டி-அம்மன்கோவில்பட்டி-எரவம்பட்டி-பூசாரிபட்டி-மலையூர்-சின்னகொசவம்பட்டி என 12 கிராமத்திற்கு பாத்தியப்பட்ட பெரிய கண்மாய் உள்ளது.

இக்கண்மாயில் ஆண்டுதோறும் மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.முன்னதாக முதலைக்குளம் மற்றும் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் முதலைக்குளத்தில் கம்பகாமாட்சியம்மன் மற்றும் 18ம் படி கருப்பசாமி கோவிலில் தாங்கள் வேண்டியது நிறைவேறினால் அதன் நினைவாக மீன் குஞ்சுகளை வாங்கி முதலைக்குளம் பெரிய கண்மாயில் விடுவார்கள்.

பின்னர் வருடத்திற்கு ஒரு முறை கம்பகாமாட்சியம்மன் மற்றும் 18ம் படி கருப்பசாமி கோவில் கோவில் திருவிழாவின் போது மீன்பிடித்திருவிழா நடைபெறும். இதற்காக அதிகாலை முதலே பல ஊர்களிலிருந்து ஆண்கள் பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் முதலைக்குளம் பெரிய கண்மாயில் குவிந்தனர். கடவுள் வழிபாடு முடிந்ததும் ஆர்வத்துடன் கண்மாயில் இறங்கி கெண்டை கெழுத்தி கட்லா விரால் உள்பட பலவகை மீன் வகைகளை பிடித்து உற்சாகமாகச் சென்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்