Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சென்னையில் 40 கி.மீ வேகத்திற்கு மேல் போகாதீங்க..! - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை

Baskaran Updated:
சென்னையில் 40 கி.மீ வேகத்திற்கு மேல் போகாதீங்க..! - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை Representative Image.

சென்னை சாலைகளில் மணிக்கு 40 கி.மீ வேகத்தை மீறி வாகனத்தை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார். 

உயர்ரக இருசக்கர வாகனங்களில் மின்னல் வேகத்தில் பறக்கும் இளைஞர்களால், சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. அவ்வப்போது அதிவேகத்தால் விபத்துகளும் ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது. ஆர்வக்கோளாறில் ஒரு சில இளைஞர்களால், எந்த தவறும் செய்யாமல் பிற வாகன ஓட்டிகளும் காயங்களும், உயிரிழந்தும் வருகின்றனர்.

சென்னையில் 40 கி.மீ வேகத்திற்கு மேல் போகாதீங்க..! - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை Representative Image

சென்னையில் முக்கியமாக ஓஎம்ஆர் ரோடு, ஈசிஆர் ரோடு, மெரீனா பீச் ரோடு உள்ளிட்ட ரோடுகளில் இளைஞர்கள் ரேஸ் ஓட்டுவதும் அவ்வப்போது நடக்கிறது. போக்குவரத்து போலீசாரும் ஆங்காங்கே சோதனை செய்து அதிவேகத்தில் பறக்கும் இளைஞர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். எனினும் இந்த குற்றம் குறைந்தபாடியில்லை. அதனால், 40 கி.மீ., வேகத்தில் மேல் ஓட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால்  வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை சாலைகளில் வேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிய மேலும் 20 இடங்களில் கண்காணிப்பு கருவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதனையடுத்து விபத்துகளை குறைக்க மணிக்கு 40 கி.மீ வேகம் என்ற கட்டுப்பாடு அவசியம். மணிக்கு 40 கி.மீ வேகம் என்ற கட்டுப்பாடு சென்னையில் 10 இடங்களில் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்