Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஊத்துமலை அடிவாரத்தில் வீட்டிற்குள் புகுந்த மலைபாம்பு பிடிப்பட்டது

Baskaran Updated:
ஊத்துமலை அடிவாரத்தில் வீட்டிற்குள் புகுந்த மலைபாம்பு பிடிப்பட்டதுRepresentative Image.

சேலம்: ஊத்துமலை அடிவாரத்தில் வீட்டிற்குள் புகுந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு உயிருடன் பிடிபட்டது.

சேலம் மாநகர் சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலை அடிவாரத்தில் உள்ள திடீர் நகரில் ராஜேந்திரன் என்பவரது வீட்டில் நேற்று நள்ளிரவு சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. இது குறித்து ராஜேந்திரன் செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் நிலைய உதவி அலுவலர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டினுள் புகுந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை உயிருடன் மீட்டு அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள சேர்வராயன் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

ஊத்துமலை அடிவாரத்தில் குடியிருப்புகள் நிறைந்து காணப்படும் பகுதியில் 10 அடி நீளமுள்ள மலை பாம்பு வீட்டினுள் புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்