Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

துப்பாக்கி சுடுதலில் உலக சாதனை படைத்த சேலம் மாவட்ட மாணவ, மாணவிகள்…!

Gowthami Subramani September 07, 2022 & 16:00 [IST]
துப்பாக்கி சுடுதலில் உலக சாதனை படைத்த சேலம் மாவட்ட மாணவ, மாணவிகள்…!Representative Image.

சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த ரைபிள் கிளப் மாணவ, மாணவிகள் 17 பேருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் உலக அளவில் சேலம் மாவட்டம் எடப்பாடி ரைபிள் கிளப் மாணவ, மாணவிகள் 17 பேர் சாதனை புரிந்துள்ளனர். தமிழ்நாடு ஏர்கன் அசோசியன் சார்பில், எடப்பாடி ரைபிள் கிளப் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் இவர்களுக்கு டிஎஸ்பி ஆரோக்கியராஜ் அவர்கள் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.

இதற்கு முன்னரே, எடப்பாடி ரைபிள் கிளப் ஜூனியர்களுக்கான பிரிவில் 5 பேர் கொண்ட குழு, பள்ளி விளையாட்டு மைதானத்தில் 150 பாட்டில்களை 7.02 நிமிடத்தில் சூட்டிங் செய்து சாதனை படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, ஏற்கனவே நடைபெற்ற யுனிவர்சல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் பியூச்சர் கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில், 80 நிமிடத்தில் 2022 பேலட்ஸ் சூட்டிங் செய்வது இலக்கு வைத்து, 12 மாணவ, மாணவிகள் 2258 பேலட்ஸ் சூட்டிங் செய்து உலக அளவில் சாதனை படைத்தனர்.

தமிழ்நாடு ஏர்கன் அசோசியேசன் செயலாளர் ராஜ்குமார் அவர்களின் தலைமையில் சிறப்பு விருந்தினராக டிஜிபி ஆரோக்கியராஜ் அவர்கள் கலந்து கொண்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கிச் சிறப்பித்தனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்