Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தூய்மை பணியாளர்கள் ஒப்பந்தத்தில் ஊழல் - வெங்கடேசன் பேட்டி

Abhinesh A.R Updated:
தூய்மை பணியாளர்கள் ஒப்பந்தத்தில் ஊழல் - வெங்கடேசன் பேட்டிRepresentative Image.

மதுரை மாவட்டத்திற்குட்பட்ட தூய்மை பணியாளர்களுக்கான திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து தேசிய தூய்மை பணியாளர்கள் நல ஆணைய தலைவர் வெங்கடேசன், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுகூட்டம் நடத்தினார். இதில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார் ஆகியோருடன் அனைத்து அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய வெங்கடசேன், “தென் மாவட்டங்களில் ஒரு வார சுற்றுபயணம் மேற்கோண்டு, தூய்மை பணியாளர்கள் நலன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ஆய்வு கூட்டங்களின் போது தூய்மை பணியாளர்கள் ஊதிய பிரச்னையை பிரதானமாக கூறுகின்றனர். தூய்மை பணியாளர்களுக்கான PF, ESI முறையாக வழங்கப்படுவதில்லை எனவும் தூய்மை பணியாளர்களுக்கான காப்பீடு முறையாக இல்லை என்பது குறித்து வலியுறுத்தி உள்ளோம்.

தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த பணி முறையால் நாடு முழுவதிலும் ஊழல் நடக்கிறது. எனவே தூய்மை பணியாளர்களை நிரந்தரபடுத்த தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். பணி நிரந்தம் அல்லது (DPS) DIRECT PAYMENT SYSTEM முறையை அமல்படுத்த வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கான கழகத்தை (கார்பரேசன்) உருவாகக வேண்டும். தேசிய அளவில் இருப்பது போல தூய்மை பணியாளர்களுக்கு மாநில அளவில் ஆணையம் அமைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கான வாரியத்திற்கு அதிகாரம் இல்லை என்றார். மேலும் இந்தியாவில் 11 மாநிலங்களில் தூய்மை பணியாளர்களுக்கான மாநில ஆணையங்கள் உள்ளது. மாநிலத்தில் SC கமிசன் உள்ளது. ஆனால் தூய்மை பணியாளர்கள் ஆணையம் இல்லை. எனவே, தூய்மை பணியாளர்களை தற்காலிக பணியாளராக நியமிக்கும் தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

தூய்மை பணியாளர்களில் 99 விழுக்காடு பட்டியலினத்தவர்கள் தான் உள்ளனர். தற்காலிக பணியாளர் முறையால் பட்டியலின மக்களிடம் இடம்மிருந்து நிரந்தர பணிகளை பறிக்கின்றனர். தூய்மை பணியாளர்களுக்கான கொரோனா கால நிதியுதவி சில மாவட்டங்களில் இன்னும் வழங்கப்படவில்லை.

தூய்மை பணியாளர்களுக்கான புகார் குறித்து 14420 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு தொடர்புகொள்ளலாம். மலக்குழிகளில் பக்கவாட்டில் உள்ள அடைப்புகளை சரிசெய்ய ஐஐடி குழு போன்ற குழுக்கள் மூலமாக புதிய இயந்திரங்களை கண்டுபிடிக்க வேண்டும். ஒப்பந்த முறை இருக்கும் வரை தூய்மை பணியாளர்கள் வறுமைக்காக மலக்குழிகளில் இறங்கி தூய்மை பணிகளில் ஈடும் நிலை உள்ளது,” என்று கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்