Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கல்லூரி மாணவிக்கு செல்போனில் பாலியல் தொல்லை.. 

Nandhinipriya Ganeshan September 06, 2022 & 17:50 [IST]
கல்லூரி மாணவிக்கு செல்போனில் பாலியல் தொல்லை.. Representative Image.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது மாணவி ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருடைய தாயாரின் செல்போனில் டெலிகிராம் செயலியை பதிவிறக்கம் செய்து உபயோகிப்படுத்தி வந்துள்ளார். கடந்த ஜூன் மாதம் அந்த ஆப்பில் இருந்து மாணவிக்கு சில புகைப்படங்கள் வந்துள்ளன. அதில், சம்பந்தப்பட்ட மாணவியின் படத்தை பாலியர் ரீதியாக சித்தரித்து அனுப்பியுள்ளனர். இச்சம்பவம் தொடர்ந்து நடந்துக்கொண்டு இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அம்மாணவி, கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஈரோடு சைபர் குற்றப்பிரிவு போலீஸ் பிரிவுக்கு போய் புகார் அளித்துள்ளார்.

அப்போது, அந்த செயலியை உடனடியாக செல்போனில் இருந்து அகற்றும்படி போலீசார் அறிவுறுத்தியதால், மாணவியும் டெலிகிராம் செயலியை அகற்றவிட்டார். ஆனால், சில நாட்கள் கழித்து மாணவின் ஆபாச படங்கள் அந்த மாணவியின் செல்போன் எண்ணிற்கும், அவருடைய தாயாரின் எண்ணிற்கும் வந்துள்ளது. இதனால், மனமுடைந்த மாணவியும், அவரது தாயாரும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஃபிஸில் புகார் மனு கொடுத்தனர். அப்போது, மாணவியின் தோழிகள், நண்பர்களின் எண்களுக்கும் மாணவியின் பாலியல் ரீதியான படங்களை அனுப்பி வைத்திருப்பது, வீடியோ கால் செய்தும் துன்புறுத்துவதாக தெரியவந்துள்ளது. 

ஆனால், அவர் புகாரில் குறிப்பிட்டு உள்ள அந்த எண்கள் இந்திய எண்கள் இல்லை என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Latest erode news in tamil, erode news tamil, erode news today, erode news in tamil, latest erode news today


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்