Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காமெடி நடிகர் கால்கள் உடைப்பு: பாஜகவினரை அடியாட்களாக மாற்றிய பெண் உட்பட 6 பேர் கைது!

Baskaran Updated:
காமெடி நடிகர் கால்கள் உடைப்பு: பாஜகவினரை அடியாட்களாக மாற்றிய பெண் உட்பட 6 பேர் கைது! Representative Image.

மதுரையை சேர்ந்த வெங்கடேஷ். இவர் கருப்பசாமி குத்தகைதாரர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள காமெடி நடிகராகவும், (சன் டிவி, விஜய் டிவி )தனியார் தொலைக்காட்சிகளில் நடைபெற்ற காமெடி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும், பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளை செய்துகாட்டியுள்ளார்.

இவர் மதுரை தபால் தந்தி நகர் 3ஆவது தெரு பகுதியில் சொந்த வீட்டில் தனது காதல் மனைவியான பானுமதியுடனும், ஒரு பெண் குழந்தையுடனும் வசித்துவந்துள்ளார். இந்நிலையில் காமெடி நடிகர் வெங்கடேஷ் யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஆக்டிவாக அப்டேடாக இருந்து வந்துள்ளார்.

இதனிடையே வெங்கடேஷ் மற்றும் அவரது மனைவியிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் விவகாரத்து வழக்கு தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்துவந்துள்ளது. இதனிடையே அவ்வப்போது கணவன் மனைவியிடையே அடிக்கடி வாக்குவாதமும் ஏற்பட்டுவந்துள்ளது.

காதலித்து திருமணம் செய்த தனது கணவர் பல பெண்களோடு தவறான உறவுடன் பழகியும் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மனைவி பானுமதி வெங்கடேஷை கால்களை உடைத்து வீட்டிற்குள்ளயே முடக்க வேண்டும் என தனது உறவினர்களிடம் கூறியுள்ளார்.இதையடுத்து வெங்கடேஷின் ஓட்டுனரின் மூலமாக ராஜ்குமார் என்பவர் மூலமாக 1லட்சம் ரூபாய் கொடுத்து வெங்கடேஷின் கால்களை உடைக்க திட்டமிட்ட நிலையில் திட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மற்றொரு திட்டம் தீட்டிய பானுமதி தனது உறவினரான பாஜக நிர்வாகியான கோசாகுளம் பகுதியை சேர்ந்த பாஜக பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் வைரமுத்துவிடம் பிரச்னையை கூறியுள்ளார்.

இதனையடுத்து பானுமதிக்கு உதவுவதாக கூறிய பாஜக நிர்வாகியான வைரமுத்து, பாஜக நிர்வாகிகள் இருவரை  சந்தித்து காமெடி நடிகர் வெங்கடேஷ் தனது சமூகவலைதள பக்கங்களில் பாஜக குறித்தும், பிரதமர், அமித்ஷா, அண்ணாமலை குறித்தும் அவர்களுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை பதிவிட்டுவருகிறார். எனவே அவரை மிரட்டி அவரது கால்களை உடைப்போம் என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு காமெடி நடிகர் வெங்கடேஷ் தபால்தந்திநகர் காரில் வந்தபோது காரை வழிமறுத்து ஓட்டுனரிடம் கத்தியை காட்டி மிரட்டிய பின்னர் வெங்கடேஷை நாராயணபுரம் பகுதிக்கு கடத்திசென்று கால்கள் இரண்டையும் உடைத்துள்ளனர்.

இதனையடுத்து காயமடைந்த நிலையில் கிடந்த  வெங்கடேஷ் அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அப்போது மருத்துவமனைக்கு சென்ற வெங்கடேஷின் னின் மனைவி மற்றும் வைரமுத்து, ஓட்டுனர் மோகன் ஆகியோர் கண்ணீர்விட்டு அழுதபடி நாடகமாடியுள்ளனர்

இதனையடுத்து வெங்கடேஷின் கார் ஓட்டுனரான மோகன் தல்லாகுளம் காவல்நிலையத்திற்கு அழுது புரண்டபடி நடித்து புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அப்போது காமெடி நடிகர் வெங்கடேஷின் மனைவி பானுமதி தூண்டுதலின் பெயரில் , வெங்கடேஷின் ஓட்டுனர் மோகனின் உதவியோடு வெங்கடேஷை தாக்கியதும் தெரியவந்துள்ளது. இதேபோன்று தனது உறவுப்பெண்ணுக்கான குடும்ப பிரச்சனைக்காக பாஜக நிர்வாகி பாஜகவினரை அடியாட்களாக பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காமெடி நடிகரான தனது கணவரை தாக்க சதி திட்டம் தீட்டிய வெங்கடேஷின் காதல் மனைவியான  பானுமதி , வெங்கடேஷின் கார் ஓட்டுனரான மதுரை சொக்கிகுளம் பகுதியை சேர்ந்த மோகன் என்ற பென்ஸ் மோகன், மதுரை புதூர் கற்பகம் நகர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் பாஜக நிர்வாகிகளான மதுரை கோசாகுளம் பகுதியை சேர்ந்த பாஜக பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் வைரமுத்து, செல்லூர் பகுதியை சேர்ந்த பாஜக 28 ஆவது வார்டு பட்டியல் அணி மண்டல தலைவர் மலைச்சாமி , மதுரை மேலபனங்காடி பாஜக கிழக்கு மண்டல செயலாளர் ஆனந்தராஜ் ஆகிய 6பேரையும் தல்லாகுளம் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

மதுரையில் காமெடி நடிகர் பெண்களுடன் தகாத உறவுடன் இருப்பதால் கால்களை உடைக்க திட்டம் தீட்டி அதற்கு தனது உறவினர் மூலமாக பாஜகவினரை அடியாட்களாக பயன்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்