Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

பெண்களுக்கு மதுபானம் இலவசம்.. திருப்பூரில் அக்கப்போர்!!

Sekar September 16, 2022 & 14:43 [IST]
பெண்களுக்கு மதுபானம் இலவசம்.. திருப்பூரில் அக்கப்போர்!!Representative Image.

திருப்பூரில் ஒரு ஹோட்டலில் டிஜே நைட் பார்ட்டி நடக்க உள்ளதாக விளம்பரம் வெளியிட்டதோடு, இந்த பார்ட்டியில் பங்கேற்க பெண்களுக்கு அனுமதி இலவசம் என்றும், பெண்களுக்கு மதுவும் இலவசமாக வழங்கப்படும் என்றும் விளம்பரம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் நகரின் மங்களம் ரோட்டில் உள்ள டிவின் பெல்ஸ் என்ற ஹோட்டல், கடந்த ஜூலை 24 ஆம் தேதி தான் திறக்கப்பட்டது. எனவே கஸ்டமர்களை கவரும் விதமாக, இந்த ஹோட்டலில் செப்டம்பர் 17ஆம் தேதி இரவு டிஜே நைட் பார்ட்டி நடப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த பார்ட்டியில் கலந்துகொள்ள, ஜோடியாக வருபவர்களுக்கும், பெண்களுக்கும் அனுமதி இலவசம் என்றும், பெண்களுக்கு மதுபானமும் இலவசம் என்றும் மேற்கொள்ளப்பட்ட விளம்பரம் வைரலாகியது. இதையடுத்து, மக்கள் மத்தியில் இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பவே ஹோட்டல் நிர்வாகம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக ஹோட்டல் நிர்வாகம் அளித்த விளக்கத்தில், வேறு ஹோட்டலின் விளம்பரம் மார்க்கெட்டிங் டீம் மூலம் தவறாக தங்கள் ஹோட்டலுக்கு வந்துவிட்டதாகவும், இப்படியொரு பார்ட்டியையே தாங்கள் ஏற்பாடு செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்