Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

சென்னை மக்களுக்கு ஹாப்பி நியூஸ்.. ஸ்பீக்கராமே.. இனிமே கவலை இல்ல..

Nandhinipriya Ganeshan Updated:
சென்னை மக்களுக்கு ஹாப்பி நியூஸ்.. ஸ்பீக்கராமே.. இனிமே கவலை இல்ல..Representative Image.

பெரும்பாலான மக்கள் பொது போக்குவரத்தையே நம்பியுள்ளனர். அதிலும் பெண்களுக்கு இலவசம் என்று அறிவிப்பு வெளியானதில் இருந்து பெண்களின் கூட்டமும் அலைமோதுகிறது. இதனால், வேலைக்கு செல்லும் பெண்கள் பெரிய அளவில் பயனடைந்து வருகின்றனர். இந்தநிலையில், கூட்ட நெரிசலில் பயணிகள் பேருந்து நிறுத்தங்களை அறிந்து கொள்ள முடியாமல் போய்விடுகிறது. சில சமயங்களில் நடத்துனரும் அவ்வபோது பஸ் ஸ்டாப்பை சொல்ல மறந்துவிடுகிறார். இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

இந்த சிரமத்தை போக்கும்விதமாக, மாநகர போக்குவரத்து கழகம் புதிய சேவையை அறிமுகபடுத்தியுள்ளது. அதாவது, சென்னை மாநகர பேருந்துகளில் பேருந்து நிறுத்தங்களின் பெயர்களை ஸ்பீக்கரில் சொல்வது போன்று வசதி செய்யப்பட்டுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால், பயணிகள் அடுத்து வரவுள்ள பேருந்து நிறுத்தங்களை இந்த வசதி மூலம் 300 மீட்டர் தூரத்துக்கு முன்பாகவே ஸ்பீக்கர் வாயிலாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கேட்டுக்கொள்ள முடியும். 

அதுமட்டுமல்லாமல், பேருந்துகளில் நடக்கும் திருட்டுகளை தடுக்கவும், பெண் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் மாநகர பேருந்துகளில் மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ் சிசிடிவி கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுவும், இம்மாத இறுதிக்குள் அமலுக்கு வரும் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்