Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Erode flash news : பவானிசாகர் அணையிக்கு நீர்வரத்து குறைவு..!

Muthu Kumar May 29, 2022 & 13:45 [IST]
Erode flash news : பவானிசாகர் அணையிக்கு நீர்வரத்து குறைவு..!Representative Image.

Erode flash news : ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் ஆகிய 3 மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. 

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால், அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

இதனையடுத்து, பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வந்தது. இன்று நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

பவானிசாகர் அணையின் இன்று காலை நிலவரப்படி, நீர்மட்டம் 82.36 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 312 கனஅடி வீதம் தண்ணீர் வரத்து உள்ளது. இந்நிலையில், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 905 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்