Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சர்வதேச திரைப்பட விழாவில் பாரதிராஜாவிற்கு கிடைக்கப்போகும் கெளரவிப்பு; அமைச்சர் அதிரடி அறிவிப்பு! 

KANIMOZHI Updated:
சர்வதேச திரைப்பட விழாவில் பாரதிராஜாவிற்கு கிடைக்கப்போகும் கெளரவிப்பு; அமைச்சர் அதிரடி அறிவிப்பு! Representative Image.

சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குனர் பாரதிராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளதுதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் இன்று 20வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சாமிநாதன், கடந்த ஆண்டு கொரோனா பேரிடர் காலத்தினால் எல்லாம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,இந்த சினிமா துறையும் பாதிக்கப்பட்டு தற்போது இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 

இந்த ஆண்டில் அனைத்து விழாவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் அவர்களும் இந்த சர்வதேச திரைப்பட விழாவிற்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழக அரசு ஆதரவுடன் 2003 முதல் இந்த விழா நடைபெற்று வருகிறது. 

இந்த வருடம் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவிற்கு 75 லட்சம் நிதி அளிக்கப்பட்டுள்ளது. இதே துறையில் ஒரு நடிகராக இருந்து , சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி நேற்று அமைச்சராக பொறுப்பேற்று இருக்க மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் இந்த விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

மேலும் இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட இருக்கிறது எனத் தெரிவித்தார். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்