Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காசேதான் கடவுளடா பாடல் ரிலீஸ் தேதி இதுவா? எப்ப வந்தாலும் கொண்டாட நாங்க ரெடிதான்! | Kaasethaan Kadavulada song release date announced

UDHAYA KUMAR Updated:
காசேதான் கடவுளடா பாடல் ரிலீஸ் தேதி இதுவா? எப்ப வந்தாலும் கொண்டாட நாங்க ரெடிதான்! | Kaasethaan Kadavulada song release date announced Representative Image.

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் மூன்றாவது முறையாக நடித்து வரும் திரைப்படம் துணிவு. வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படமாக கருதப்படும் இந்த திரைப்படம் வரும் 2023 பொங்கல் தினத்தை முன்னிட்டு ரிலீஸாக இருக்கிறது. 

பொங்கல் தினத்தில் அஜித்குமார் மட்டுமின்றி , நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படமும் வரத் தயாராக இருக்கிறது. இரண்டு படங்களும் மோத உள்ள நிலையில், இந்த படத்தின் பாடல்களிலிருந்தே எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. 

வாரிசு திரைப்படத்திலிருந்து இதுவரை ரஞ்சிதமே, தீ தளபதி என இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், துணிவு படத்திலிருந்து 1 பாடல்தான் ரிலீஸாகி இருக்கிறது. ஆனால் துணிவு படத்தில் மொத்தமே 3 பாடல்கள்தான் இருக்கிறது எனவும் கூறுகிறார்கள். 

துணிவு படத்தின் இரண்டாவது பாடலான காசேதான் கடவுளடா பாடல் வரும் 22ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். ஏற்கனவே பாடலின் சில நொடி காட்சிகள் வெளியாகி ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் மிதக்க வைத்துள்ளன. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்