Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

யாரு அந்த ராக்ஸ்டார்! கனா காணும் காலங்கள் லேட்டஸ்ட் எபிசோட் விறுவிறுப்பு

UDHAYA KUMAR May 24, 2022 & 18:29 [IST]
யாரு அந்த ராக்ஸ்டார்! கனா காணும் காலங்கள் லேட்டஸ்ட் எபிசோட் விறுவிறுப்புRepresentative Image.

 kana kanum kalangal latest episode | season 1 hotstar | season 2 hotstar | season 3 hotstar | season 4 hotstar 

90ஸ் கிட்ஸ் என்றாலே விளையாட்டு முதல் சாப்பாடு வரை தனித்தனி கணக்கெடுத்து அதை இன்றும் நினைத்து மகிழும் குழந்தை மனம் படைத்தவர்கள்தான். 20 வருடங்கள் கழித்தும் அந்த நினைவுகளைத் திரும்பி பார்க்கும்போது ஒரு சில விசயங்கள்தான் நம் வாழ்வின் பொற்காலமாக நினைக்கத் தோன்றும். பள்ளி வாழ்க்கை இனிமையாக இருக்கிறதோ இல்லையோ அதை மீண்டும் நினைக்கச் செய்யும் சீரியல்கள் நம்மை அதுதான் அழகான உலகம் என நம்ப வைத்துவிடும். 

அப்படி ஒரு சீரியல்தான் கனா காணும் காலங்கள். பெயரைக் கேட்டவுடன் உங்கள் காதுகளில் கனவுகள் காணும் வயசாச்சு இளமைக்கு முகவரி கிடச்சாச்சு எனும் பள்ளி கீதம் ஒலிக்கத் தொடங்கினால் சந்தேகமே இல்லை நீங்களும் 90ஸ் கிட்தான்.

ஹே இன்னிக்கு என்ன ஆச்சு. ஜோ என்ன பண்ணான் தெரியுமா. இந்த சங்கவி இப்படி பண்ணுவானு எதிர்பார்க்கவே இல்ல. உன்னி ஏன் இப்படி சுத்திட்டு இருக்கான். இப்படி பல விசயங்களை பள்ளி நாட்களில் முந்தைய நாள் எபிசோடை பார்த்து பேசியதை மறக்கமுடியுமா? இந்த காலத்துக்கு ஏற்றவாறு மீண்டும் கனா காணும் காலங்கள் ஒளிபரப்பாகிவருகிறது. ஆனால் இந்த முறை ஹாட்ஸ்டாரில் மட்டுமே வருகிறது. 

தீபிகா வெங்கடாச்சலம், ராஜா, வெற்றி, பிரபு, தேஜா வெங்கடேஷ் என பல புதுமுகங்கள் தொடரில் நடித்து வருகின்றனர். ராஜேஷ் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல இளம் பேச்சாளர், யூடியூப் மூலம் பிரபலமடைந்த ராஜ்மோகன் பிடி மாஸ்டராக நடித்துள்ளார். 

பள்ளிக்கு ஒரு ஆபத்து வருகிறது. பள்ளியை மொத்தமாக இழுத்து மூட திட்டம் தீட்டப்படுகிறது. விரைவில் இந்த திட்டத்தை முறியடிக்க கரஸ்பாண்டட் சக்திவேல் மூலமாக ஒரு நல்ல திட்டம் உருவாக்கப்படுகிறது. அது பழைய மாணவர்கள் அனைவரையும் பள்ளிக்கு அழைத்து வருவது. இந்நிலையில் யார் யார் பள்ளியில் படித்தார்கள் என பலரும் தங்கள் பங்குக்கு ஆட்களை கணக்கெடுக்க, இவர்கள் அனைவரும் பெரிய ஆளாக இல்லை. நமக்கு ஒரு ஸ்டார் வேல்யூ கொண்ட ஒருவர் வேண்டும் என முடிவு செய்கின்றனர். 

அப்படி ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் ராக்ஸ்டார் அஷோக்குமார் என்பது கேண்டீன் ஓனர் மூலமாக தெரிய வருகிறது. இதை ஜெர்ரி மற்றும் மலரிடம் கூற அட ஆமா அவன் எங்க கூடதான் படிச்சான் என இவர்களுக்கு நினைவுக்கு வருகிறது. அஷோக்கின் தொடர்பு எண்ணை பெற திட்டமிடுகின்றனர். 

அஷோக் குமார் யார்.. அவரை எப்படி தொடர்பு கொண்டார்கள்.. அஷோக்குமார் பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சம்மதித்தாரா என தெரிந்து கொள்ள ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் கனா காணும் காலங்கள் தொடரைக் காணுங்கள்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்