Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு விருது; பிரதமர் முதல் ரஜினி வரை என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா?

KANIMOZHI Updated:
‘நாட்டு நாட்டு’  பாடலுக்கு விருது; பிரதமர் முதல் ரஜினி வரை என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா?Representative Image.

“எங்கள பெருமைப்படுத்திட்டீங்க”... வாழ்த்திய ரஜினி; நன்றி சொன்ன ராஜமவுலி! 


இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான  ஆர்ஆர்ஆர்  திரைப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 3 மொழிகளில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1000ம் கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற கோல்டன் குளோப் விருதுக்கு ஆர்ஆர்ஆர் படமும் போட்டியிட்டிருந்தது. இந்த கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் பரிந்துரைக்கப்பட்டது. இந்த பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய பாடல் இதுவாகும்.

 

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதை ‘நாட்டு நாட்டு’ பாடல் வென்றது. இந்த நிகழ்வில் ஆர்ஆர்ஆர் படத்தின் இயக்குனர் ராஜமௌலி, ராம்சரண், இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு விருதை பெற்றுக் கொண்டனர்.

 

இது குறித்து பிரதமர் தனது டிவிட்டர் பக்கத்தில் படத்தின் நாயகர்கள் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், இயக்குனர் ராஜமௌலி மற்றும் இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோரை டேக் செய்து பாரட்டுக்களை தெரிவித்துள்ளார். மேலும் இந்த விருது ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

இதேபோல இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான், தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் பாராட்டியுள்ளனர். சிரஞ்சீவி இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் “இது ஒரு வரலாற்று வெற்றி. படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

THANK YOU Keeravani and Rajamouli for making us proud and bringing home the Golden Globe for Indian cinema.@mmkeeravaani @ssrajamouli

— Rajinikanth (@rajinikanth) January 11, 2023

இந்நிலையில் கீரவாணி, ராஜமவுலி இருவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதற்கு ராஜமவுலி நன்றி தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை