Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அன்றும் இன்றும் என்றும் 16 வயதினிலே... 45 ஆண்டுகள் ஆனாலும் மலரும் செந்தூரப் பூவே பாடல்..!

Gowthami Subramani September 14, 2022 & 19:40 [IST]
அன்றும் இன்றும் என்றும் 16 வயதினிலே... 45 ஆண்டுகள் ஆனாலும் மலரும் செந்தூரப் பூவே பாடல்..!Representative Image.

90s கிட்ஸ் தலைமுறையினர்களின் ரசிகர் பட்டாளம்னா, அது நம்ம கமல்ஹாசனுக்கும், ரஜினிக்கும் படையெடுத்து இருப்பாங்க. ரஜினி ரசிகர்கள், கமல் ரசிகர்கள் என தனித்தனியா கூறினாலும், இவங்க இரண்டு பேரும் சேர்ந்து நடித்த டாப் ஹிட்டான 16 வயதினிலே மூவி அனைவராலும் ரசிக்கக் கூடியவையாக இருந்தது.

இது கமல், ஸ்ரீ தேவி, ரஜினி காந்த், பாக்யராஜ் நடித்த பெரிய அளவில் ஹிட் ஆன மூவி. இந்தப் படத்தில் வரும் பாடலான செந்தூரப் பூவே பாடல், இன்னைக்கும் பல்லாயிரக்கணக்கானோரின் மனதில் பூத்துக் கொண்டு தான் இருக்கிறது என்று கூறலாம். இளையராஜா இசையில் கமல், ஸ்ரீ தேவியின் நடிப்பில் படம் வந்த காலத்தில் திரையில் 175 நாட்களுக்கு காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

படம் வந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, 16 வயதினிலே படத்திற்காக விழா ஒன்று வைக்கப்பட்டது. இந்த விழாவில் பேசிய கமல்ஹாசன், “இந்தப் படம் வெற்றி அடையும்னு சொன்னவங்கள விட, கேலி செய்தவங்க தான் அதிகம்” என்று மேடையில் பேசினார். படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியுமே இன்றும் எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்