Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 72,616.44
-327.24sensex(-0.45%)
நிஃப்டி22,022.45
-125.45sensex(-0.57%)
USD
81.57
Exclusive

படமே முடியல அதுக்குள்ள 120 கோடியாம்... யார் படத்துக்கு தெரியுமா?

UDHAYAKUMAR September 12, 2022 & 18:00 [IST]
படமே முடியல அதுக்குள்ள 120 கோடியாம்... யார் படத்துக்கு தெரியுமா?Representative Image.

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் எடுத்து முடிப்பதற்கு முன்னரே 120 கோடி ரூபாய்க்கு விலை பேசப்பட்டு வருகிறதாம். இது இன்னமும் அதிகமாக விலை போகும் என கூறப்படுகிறது. 

வரும் 2023ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு ரிலீசாகவுள்ள  வாரிசு திரைப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. விஜய் ஜோடியாக இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இவர்கள் தவிர இந்த படத்தில் சரத்குமார், ஷ்யாம் என இன்னும் பலர் நடித்து வருகின்றனர். 

தமன் இசையில் பாடல்கள் வெறித்தனமாக வெளிவரும் எனவும், வரும் தீபாவளி தினத்தில் முதல் பாடல் ரிலீசாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.  சாட்டிலைட் உரிமை, டிஜிட்டல் உரிமை, ஆடியோ உரிமை என இவை அனைத்தும் சேர்த்து 120 கோடிக்கும் அதிகமாக வியாபாரம் பேசிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்