Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நம்ம ஜெயிச்சுட்டோம் மாறா....தேசிய விருதுகளை அள்ளிக்குவித்த சூரரைப்போற்று.....!

madhankumar July 22, 2022 & 17:11 [IST]
நம்ம ஜெயிச்சுட்டோம் மாறா....தேசிய விருதுகளை அள்ளிக்குவித்த சூரரைப்போற்று.....!Representative Image.

68 வது தேசிய விருதுகள் அறிவிப்பு இன்று நடைபெற்றது அதில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான "சூரரை போற்று" படம் விருதுகளை குவித்திருக்கிறது. இந்த படம் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை ஆகிய 5 விருதுகளை பெற்றுள்ளது
.

சிறந்த நடிகர்: சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூரரை போற்று படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகை: சிறந்த நடிகைக்கான தேசிய விருது சூரரை போற்று படத்தில் நடித்ததிற்காக நடிகை அபர்ணா பாலமுரளிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த திரைக்கதை : சூரரைப் போற்று படத்திற்காக சுதா கொங்கரா மற்றும் ஷாலினி உஷா நாயருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த பின்னணி இசை (தமிழ்) - சூரரைப் போற்று படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த படம்: மேலும் சிறந்த படத்திற்கான தேசியவிருதையும் சூரரைப்போற்று பெற்றுள்ளது.

தேசிய விருதுகளை பெற்ற மற்ற தமிழ் படங்கள்:

சிறந்த வசனம் (தமிழ்) - மண்டேலா படத்திற்காக மடோன்னே அஷ்வினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திராகாந்தி விருது: மண்டேலா படத்திற்காக மடோன்னே அஷ்வினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த துணை நடிகை: சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் படத்திற்காக லட்சுமி பிரியா சந்திரமவுலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்