Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

AK 61 பர்ஸ்ட் லுக் போஸ்டர்...! வெறித்தனமா இருக்குது ...

UDHAYA KUMAR September 21, 2022 & 17:37 [IST]
AK 61 பர்ஸ்ட் லுக் போஸ்டர்...! வெறித்தனமா இருக்குது ...Representative Image.

போனி கபூர் தயாரிக்க ஹெச் வினோத் இயக்கத்தில் நடித்து வரும் அஜித்குமாரின் அடுத்த பட டைட்டிலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. மாஸான லுக்கை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது படக்குழு. 

Image

போனி கபூர் தமிழில் படம் தயாரிக்க திட்டமிட்ட நிலையில், அஜித்தை கதாநாயகனாக வைத்து படம் எடுக்க முடிவு செய்தார். இதனையடுத்து அஜித்குமாரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. தமிழில் சிறப்பான இளம் இயக்குநரைத் தேர்ந்தெடுத்து கதை கேட்பது என முடிவு செய்யப்பட்டது. முதலில் ஹெச் வினோத்திடம் கதை கேட்க, அவர் அஜித்துக்கென சூப்பரான கதையைக் கூறினார். ஆனால் அந்த கதை கொஞ்சம் அதிக பட்ஜெட் என தயாரிப்பாளர் போனிகபூர் பின்வாங்கினார். 

ஹெச் வினோத் சொன்ன கதை மிகவும் பிடித்திருந்ததால் அஜித்துக்கு இந்த கதையையும், ஹெச் வினோத்தையும் விட்டுக்கொடுக்க மனமில்லை போலும், இதனாலேயே ஒரு முடிவுக்கு வருகின்றனர் அஜித்தும், போனியும். போனி ஹிந்தியில் வெற்றி பெற்ற ஒரு கதையை ரீமேக் செய்யலாம் என ஏற்கனவே அஜித்திடம் பேசியிருந்தார். அதனை வினோத்தை வைத்தே ரீமேக் செய்வது என முடிவு எட்டப்பட, அவரும் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கி கொடுத்தார். 

ஹெச் வினோத் இயக்கத்தில் அந்த படம் நல்ல வரவேற்பை பெற, அடுத்து வினோத்தின் சொந்த கதையை படமாக்கலாம் என பேசப்பட்டது. ஆனால் அதற்கு கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும் என போனி கூறியதால், மீண்டும் வேறு ஒரு கதையை படமாக்கலாம் என அஜித், ஹெச் வினோத்திடம் கேட்க, இசைவு தெரிவித்தார் வினோத்.  அப்படியாக வலிமை படத்தையும் எடுத்தனர். வலிமை கதையும் ஹெச் வினோத்துடையதுதான் என்றாலும், அஜித்தை வைத்து எடுக்க நினைத்த கதை AK 61 படத்தின் கதைதான். 

இரண்டு படங்களின் வெற்றிக்குப் பிறகு, அடுத்த படத்தை நோக்கி பயணப்பட்டது படக்குழு. வலிமை படம், கோவிட் பாதுகாப்பு பிரச்னைகளால் தாமதமாகிக் கொண்டிருக்க, வினோத் இந்த படத்தின் கதையை மெருகேற்றிக் கொண்டிருந்தார். இந்நிலையில், கிட்டத்தட்ட படப்பிடிப்பும் முடியும் தருவாயில், கடைசி கட்ட படப்பிடிப்பு மட்டும் எஞ்சியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்