Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அஜித் பாட்டுக்கு ஆடிய பிரபல புதுமண தம்பதிகள்!

UDHAYA KUMAR May 19, 2022 & 15:33 [IST]
அஜித் பாட்டுக்கு ஆடிய பிரபல புதுமண தம்பதிகள்! Representative Image.

நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணியின் காதல் திருமணம் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் இருவரும் அஜித் பாட்டுக்கு நடனமாடி அசத்தினர். இதனால் வந்திருந்தவர்களும் ஆனந்தமாக நடனமாடி மகிழ்ந்தனர். இதனை சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள். 

ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் தமிழ் சினிமாவில் நடித்து வருகின்றனர். மரகத நாணயம் எனும் படத்தில் நடித்தபோது இருவருக்கும் நட்பு உண்டாகி, நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், தங்களது பேரன்பை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்த முடிவு செய்தனர். 

பெற்றோர்களிடம் பேசி இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த மார்ச் 24ம் தேதி இதற்கான நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பின் மே 18ம் தேதி திருமணம் செய்து வைப்பது என முடிவெடுக்கப்பட்டது.  இந்நிலையில், நேற்றைய தினம் திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. 

திருமணத்துக்கு முன் இருவரும் மஞ்சள் கலந்த உடையுடன் நடனமாடினர். அவர்கள் ஆடியது அஜித்தின் ஆலுமா டோலுமா பாடல். இதனால் அஜித் ரசிகர்கள் இந்த வீடியோவை மகிழ்ச்சியுடன் ஷேர் செய்து வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்