Wed ,Feb 28, 2024

சென்செக்ஸ் 72,292.59
-802.63sensex(-1.10%)
நிஃப்டி21,931.60
-266.75sensex(-1.20%)
USD
81.57
Exclusive

ஆஹா கல்யாணம் சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Vijay TV Aaha Kalyanam Serial

Priyanka Hochumin Updated:
ஆஹா கல்யாணம் சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Vijay TV Aaha Kalyanam SerialRepresentative Image.

சீரியல்: கடந்த 20 மார்ச் 2023-இல் இருந்து விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.00 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் ஆஹா கல்யாணம். இந்த சீரியல் காட்சோரா என்னும் பெங்காலி தொடரின் அதிகாரபூர்வ ரீமேக் ஆகும். இதில் முக்கிய கதாபாத்திரமாக மௌனிகா, விக்ரம் ஸ்ரீ, அக்ஷய கந்தமுதன், காயத்ரி ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர். இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர்கள், கதை, நேரம், இன்றைய எபிசோடு மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் விரிவாக பார்க்கலாம்.

ஆஹா கல்யாணம் சீரியல் நடிகை, நடிகர்கள்:

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திரத்தின் பெயர் [Character Name]

விக்ரம் ஸ்ரீ

சூர்யா

அக்ஷய கந்தமுதன்

மகாலட்சுமி

விபிஷ் அஸ்வந்த்

கௌதம்

காயத்ரி ஸ்ரீ

ஐஸ்வர்யா

ஆர்.ஜி.ராம்

விஜய்

பவ்ய ஸ்ரீ

பிரபா

மௌனிகா

கோடீஸ்வரி

அனிதா வெங்கட்

ராஜலட்சுமி

டாக்டர் ஜெய

காயத்திரி

ப்ரீத்திகா

ஆர்த்தி

ஷில்பா மேரி தெரசா

சித்ராதேவி

அருணிமா சுதாகர்

அக்ஷரா

ஆடிட்டர் ஸ்ரீதர்

வேதாச்சலம்

ஆஹா கல்யாணம் சீரியல் முழு விவரம்:

சீரியல் பெயர்

ஆஹா கல்யாணம்

சேனல்

விஜய் டி.வி

ரிலீஸ் தேதி

20 மார்ச் 2023

ஒளிப்பரப்பு நேரம்

07.00 PM - 07.30 PM [20 - 22 நிமிடங்கள்]

ஒளிப்பரப்பாகும் நாள்

திங்கள் முதல் வெள்ளி வரை

இயக்குநர்

பிரான்சிஸ் கதிரவன்

தயாரிப்பாளர்

ராஜவேலு ரத்னவேல்

தயாரிப்பு நிறுவனம்

A Tele Factory

ஓடிடி தளம்

Disney+Hotstar

 

ஆஹா கல்யாணம் சீரியலின் கதை..

ஆஹா கல்யாணம் சீரியல் கோடீஸ்வரியின் பேராசையை மையமாக வைத்து நகரும் கதைக்களம். கோடீஸ்வரிக்கு மொத்தம் மூன்று பெண் குழந்தைகள். எப்படியாவது மூன்று மகள்களையும் வசதியான குடும்பத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசை. மறுபக்கம் புகழ்பெற்ற வைர வியாபாரி தொழில் செய்யும் வேதாச்சலம் குடும்பத்தினர். எல்லா சிறப்பு நிகழ்ச்சிக்கும் இவர்களுக்கு தான் முதல் மரியாதை. அதே போல சரஸ்வதி பூஜைக்கும் அவர்கள் எல்லா ஏற்பாட்டையும் மேற்கொண்டனர். கோடீஸ்வரியின் இரண்டாவது மகள் மஹாலக்ஷ்மிக்கு தேவி சரஸ்வதி சிலையை அலங்கரிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இதனை சாக்காக வைத்து தனது மூன்று மகள்களையும் அவர்களின் வீட்டிற்குள் நுழைய வைக்க முயல்கிறாள் கோடீஸ்வரி.

அப்படியாக வேதாச்சலத்தின் மூத்த மகன் சூர்யா மற்றும் கோடீஸ்வரியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும் திருமண ஏற்பாடு நடைபெறுகிறது. ஆனால் பணத்தாசையில் ஐஸ்வர்யா திருமணத்தில் இருந்து வெளியேறுகிறாள். குடும்பத்தின் மானத்தை காப்பாற்று சூர்யாவை திருமணம் செய்ய சம்மதிக்கிறாள் மஹாலக்ஷ்மி. இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் என்னென்ன சவால்களை மேற்கொள்ள போகிறார்கள் என்பது தான் கதைக்களம்.

ஆஹா கல்யாணம் சீரியல் இன்றைய எபிசோட்

ஆஹா கல்யாணம் சீரியலின் இன்றைய எபிசோடை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.

ஆஹா கல்யாணம் சீரியல் ப்ரோமோ

டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்னபாக, விஜய் டி.வி வெளியிடும் ஆஹா கல்யாணம் சீரியலின் ப்ரோமோவை பார்க்க இதை க்ளிக் செய்யவும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்