Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அதிர்ச்சி.. பிரபல சீரியல் நடிகர் தற்கொலை...

Nandhinipriya Ganeshan October 05, 2022 & 10:20 [IST]
அதிர்ச்சி.. பிரபல சீரியல் நடிகர் தற்கொலை...Representative Image.

90 ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த மர்மதேசம், ஜீ பூம்பா உள்ளிட்ட தொடர்களில் சிறுவனாக நடித்த இளம் இயக்குனரான லோகேஷ் ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1990 களில் தொலைக்காட்சியில் வெளியான மர்ம தேசம், ஜீ பூம்பா உள்ளிட்ட தொடர்களில் இளம் வயது ராஜேந்ததிரன் உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தவர் லோகேஷ். இப்போது மர்மதேசம் தொடர் மறு ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதுவும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. 

சமீபத்தில் தான் மர்ம தேசம் தொடர் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிகிழ்ச்சியை அந்த தொடர் இயக்குனர், தயாரிப்பாளர், லோகேஷ் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் சென்னையில் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

இந்தநிலையில், லோகேஷ் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெளியான பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சமூக வலைத்தளத்தில் ராஜேந்திரனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்