Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மச்சானை கடுப்பாகிய மாதவன்...இப்படியெல்லாமா பிராங்க் பண்ணுவாங்க...?

madhankumar June 30, 2022 & 12:50 [IST]
மச்சானை கடுப்பாகிய மாதவன்...இப்படியெல்லாமா பிராங்க் பண்ணுவாங்க...?Representative Image.

நடிகர் மாதவன் முதன் முதலாக இயக்கி நடித்துள்ள படம் ராக்கெட்ரி : தி நம்பி எஃபக்ட் இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாகஉளள்து.

மாதவன் தற்போது இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியும் விண்வெளிப் பொறியாளருமான நம்பி நாராயணன் வாழ்க்கையை படமாக்கியுள்ளார். படத்திற்கு ராக்கெட்ரி : தி நம்பி எஃபக்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தில் நம்பி நாராயணாக நடிப்பதோடு மட்டுமல்லாமல் கதை , திரைக்கதை , இயக்கம் என அனைத்தையும் மாதவனே செய்திருக்கிறார்.  மாதவனுக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்துள்ளார். படத்தின் தமிழ் பதிப்பில் நடிகர்  சூர்யாவும் இந்தி பதிப்பில் நடிகர்  ஷாருக்கானும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். 

இந்நிலையில் நடிகர் மாதவன் தனது மனைவியின் தம்பி அதாவது தனது மச்சானுக்கு ஒரு புகைப்படம் ஒன்றை அனுப்பியுள்ளார் அதனை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

அப்படி என்ன புகைப்படமாக இருக்கும்?

இந்த படத்திற்காக நடிகர் மாதவன் நம்பி நாராயணனின் வயதான கெட்டப் போட்டு நடித்துள்ளார், அந்த தோற்றத்தில் தனது மனைவியுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படம் தான் அது. அதனை சமூகவலைத்தளத்தில் பகிர்வதற்கு முன்னர் தனது மனைவியின்  தம்பிக்கு அனுப்பியுள்ளார். இதனைக்கண்ட அவர் அதிர்ச்சியடைந்து கோபமும் பட்டுள்ளார். அதனையே அந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாகவும் வைத்துள்ளார்.

மேலும் அந்த கெட்டப் போடும் வீடியோ ஒன்றையுமேற்கணவே இணையத்தில் பகிர்ந்திருந்தா நடிகர் மாதவன். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்