Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விக்னேஷ்காந்த் திருமணத்தில் சிவகார்த்திகேயன்.. வைரலாகும் புகைப்படங்கள்!!

Sekar September 07, 2022 & 17:43 [IST]
விக்னேஷ்காந்த் திருமணத்தில் சிவகார்த்திகேயன்.. வைரலாகும் புகைப்படங்கள்!!Representative Image.

ப்ளாக்‌ஷீப் யூடியூப் சேனல் மூலம் பிரபலமடைந்த விஜே விக்னேஷ்காந்துக்கு, அவருடைய சொந்த ஊரில் இன்று சீரும் சிறப்புமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. அவரது திருமணம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ள நிலையில், ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

யூடியூப் மூலம் பிரபலமானாலும் ஆர்ஜே, விஜே, வெள்ளித்திரையில் காமெடி நடிகர் என பல அவதாரம் எடுத்தவர் தான் விக்னேஷ்காந்த். தற்போது ப்ளாக்‌ஷீப், உனக்கென்னப்பா உள்ளிட்ட பல யூடியூப் சேனல்கள் மற்றும் பி.எஸ்.வேல்யூ ஓடிடி தளம் என மீடியாவில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில், விக்னேஷ்காந்துக்கு, கடந்த மே மாதம் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இன்று அவரது திருமணமும் நடந்து முடிந்துள்ளது. 

அவரது சொந்த ஊரான திருச்சியில் நடந்த இந்த திருமணத்தில் பிரபல பேச்சாளரும், நடிகருமான கு. ஞானசம்பந்தன் கலந்து கொண்டு தாலி எடுத்து கொடுத்துள்ளார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயனும் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

தற்போது இவரது திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவ, ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்